பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 புரட்சியாளர் பெரியார் ஆனால் இந்திய அரசியல் சட்டம் சாதி ஒழிப்பிற்கு இடம் கொடுக்கும் வகையில் அமையவில்லை; மாறாக சாதியை பாது காக்கும் முறையில் இருக்கிறது என்பது பெரியார் முடிவு. தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் மட்டும் இச்சட்டத்தி லிருந்து விடுபடவோ அதை மாற்றவோ முடியாது என்று திடமாக நம்பினார். எனவே தமிழ்நாட்டைப் பிரிக்கவேண்டுமென்பதில் முனைப்பாக இருந்தார். அதற்காக அதிர்ச்சி மருத்துவமும் செய்தார். அத்தகைய அதிர்ச்சி மருத்துவங்களில் ஒன்று: 'நாட்டுப் பட எரிப்பு' என்பதாகும். தமிழ்நாடு நீங்கிய இந்திய படத்தை எழுதி, அதை ஊர்தோறும் கொளுத்தும்படி பெரியார் 1960இல் வேண்டுகோள் விடுத்தார். பெரியார், குத்தூசி குருசாமி, ஆதித்தனார் போன்ற பலரை, தடுப்புக் காவல் சட்டப்படி முன்னேற்பாடாக சிறைப்படுத்தினார் கள். இருப்பினும், குறிப்பிட்டபடி, தமிழ்நாடு நீங்கிய இந்தியப் படம் பல இடங்களில் எரிக்கப்பட்டது. ஈராயிரம் தொண்டர்கள் பங்குகொண்டார்கள். 6-4-1965இல் பெரியார் கட்டளைப்படி தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் கம்பராமாயணத்தை எதிர்த்ததும், 1971இல் சேலத் தில் இராமன் படத்தை இரண்டாம் முறையாகக் கொளுத்தியதும் மக்களை விழிப்பூட்டும் நோக்கத்தோடு செய்யப்பட்ட அதிர்ச்சி மருத்துவமே. தமிழ்நாட்டு நில உச்சவரம்புச் சட்டம் செல்லுபடி ஆகாதென்று 1964ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் முடிவு சொன்னதை யொட்டி பெரியார் தமிழ்நாட்டில் கண்டன நாள் நடத்தியதும் இவ்வகையைச் சாரும். நடமாடும்; இல்லை, சூறாவளியெனச் சுழன்ற, பகுத்தறிவுத் தந்தை பெரியார் பெரும் புரட்சியாளர் ஆவார். கிளர்ச்சிகளின் தனிநாயகம் பெரியார். எந்தக் கிளர்ச்சியிலும் எத்தகைய வன்முறையும் வெடிக்காதபடி அடக்கிவைத்திருந்த காந்தீய நாயகம் தந்தை பெரியார். பெரியார், நடத்திய கிளர்ச்சிகள், போராட்டங்கள், எதுவும் தம்முடைய தனி நலத்திற்காக அல்ல. கட்சியின் பெருமைக்காக வும் அல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கொடுமைகளை, இழிவுகளை, ஏற்றுக்கிடந்த--கிடக்கும்-ஊமைகளுக்காகவே அவர்கள் மற்ற நாட்டவர்களைப்போன்று மதிப்புள்ள மனிதர்க ளாக வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்பதற்காகவே பெரியார் நடத்திய அத்தனை கிளர்ச்சிகளும் போராட்டங்களும்.