பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழிப்பூட்டும் கிளர்ச்சிகள் 163 இந்தியா விடுதலை பெற்றுவிட்டது என்பது சொல்லளவே; குறிப்பிட்ட காலகட்டங்களில், பொதுத் தேர்தல் நடத்தி, வாக்குரிமைக்கு வாய்ப்பு கொடுப்பதாலேயே நம்முடைய அரசியல் அமைப்பையும் நடைமுறையையும் மக்களாட்சி முறை என்று ஒப்புக்கொள்ளமுடியாது. 'மக்களின் பேரால் யாரோ சிலர், மக்களை ஏமாற்றவும் அடக்கி வைக்கவும் பழைய சாதி வேற்றுமை முதலிய கொடுமைகளை அப்படியே பாதுகாக்கவும் பொதுமக்களைச் சுரண்டவும் உருவாக் கப்பட்ட “அரக்கு மாளிகை" நம் அரசியல் அமைப்பு. தாழ்த்தப் பட்டோரும் நலிந்தோரும் பாட்டாளிகளும் இதனால் நன்மை பெற இயலாது. பழைய விலங்குகள், அநீதிகள், அப்படியே தொடரும்' என்பது பெரியாரின் மதிப்பீடு. இது எண்ணற்ற மக்களின் மதிப் பீடுமாக இருந்தது; இருக்கிறது. ஆனால்? மற்றவர்கள் நாலுபேர் அறிய சொல்ல அஞ்சின கருத்துக்களை பெரியார் துணிந்து பறைசாற்றினார். 'கொள்கை அளவில் எவ்வளவு உயர்வாகத் தோற்றமளிக்கச் செய்தாலும் நடை முறையில் இந்தியாவின் சூழ்நிலையில் மக்களாட்சி என்பது முட்டாள்களை அயோக்கியர்கள் அடக்கி ஒடுக்கி ஏமாற்றும் திட்ட மாகவே உள்ளது, இதைக் கிலி என்று தள்ளிவிடமுடியாது. சமுதாய இழிவு ஒழிப்பு புரட்சி எரிமலையாக வாழ்ந்த பெரியார், தமது தொண்ணூற்று அய்ந்தாம் வயதில், சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டைக் கூட்டினார். கருஞ்சட்டைப் படையினர் பெரும் வெள்ளமெனக் குழுமினர். தந்தை பெரியாரின் தலைமை யில் 8,9-12-73இல் நடந்த அம்மாநாடு, எடுத்த முடிவுகள் பல. அவற்றில் சிலவற்றைக் காண்போம்: 'சாதி என்பது எந்த இடத்திலும் வேண்டும். நடப்பிலும் இல்லாது இல்லாது செய்யப்பட பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். சாதி உணர்ச்சி அறவே மறையும்படி செய்யவேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியு மென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், 'தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைபிடித்தாலும் அது சட்டவிரோதம்' என்று அரசியல் சட்டத் தில் 17ஆவது விதி கூறுகிறதே! அவ்விதியிலுள்ள தீண்டாமை' என்பதற்குப் பதிலாக 'சாதி' என்ற சொல்லை மாற்றி சாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண்டும்.