164 புரட்சியாளர் பெரியார் 'சமுதாய இழிவினை மாற்றுகின்ற இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல், டில்லி அரசாங்கம் மறுக்குமானால் எங்களை சூத்திரர்களாக, இழி பிறவிகளாக, ஆக்கும். இப்படிப்பட்ட ஆட்சியின்கீழ் நாங்கள் குடிமக்களாக இருக்க சம்மதமில்லை என்பதை அறிவிப்பதோடு அதற்கான கிளர்ச்சிகள் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது. தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இது குறித்து மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடு கொடுப்பதுடன் அக்காலக் கெடுவுக்குள் நமக்கு சரியான சமாதானம் தந்து உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கத் தவறுமானால், மாபெருங் கிளர்ச்சிக்குத் தங்களை சாந்தமும் சமாதானமுமான வழி முறைகளில் எவ்வித பலாத்கார மான செய்கைகளுக்கும் இடமில்லாமல், மேற்கொள்வதென்று முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கான கிளர்ச்சித் தேதி குறிப்பிடுவதிலும் மேற்கொண்டு காரியங்கள் செய்வதையும் பெரியார் அவர்களுக்கு இம்மாநாடு பொறுப்பளிக்கிறது. மறைவு இப்பொறுப்பையேற்று கிளர்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே பெரியார் 24-12-73இல் மறைந்துவிட்டார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/176
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை