|| புறத் தோற்றம் பெரியாரின் தனித்தன்மை சிவந்த மேனி; தடித்த உடல்; பெருத்த தொந்தி; நல்ல உயரம்; வெளுத்த தலை மயிர்; நரைத்த மீசை; நடுத்தரமான தாடி; திரண்டு நீண்ட மூக்கு; அகன்ற நெற்றி; உயர்ந்து மயிரடர்ந்த புருவங்கள்; ஆழமான கண்கள்; முதுமையிலும் ஒளிவிடும் விழிகள்; மெதுவான உதடுகள்; செயற்கைப் பற்கள்; ஒரு சாதாரண மூக்குக் கண்ணாடி. பெசன்ட் அம்மையாரின் தலை மயிர்; பர்னாட்ஷாவின் தாடி; தாகூரைவிட அழகான மூக்கு; இவர்கள் மூவரையும்விட அழகான உருண்டை முகம்; ஒரு தனியான முகவெட்டு. பளிங்குபோன்ற உண்மையின் கவர்ச்சி. இது பெரியாரின் புறத் தோற்றம். அடுத்து அகத் தோற்றத் தைக் காண்போம். தன்மான இயக்கத் தந்தையை அவருடைய இயற் பெயர் கொண்டு அழைப்பது அரிது. அய்ம்பது ஆண்டுகளாக அவரைப் பெரியார் என்று அழைப்பது நடைமுறை பெரியார் பெரியார் மலேயா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுவதற்கு முன்பே, 1928இல் ரசிகமணி என்றழைக்கப்படும் திரு. டி. கே. சிதம்பரநாதர், ஈ. வே. ராமசாமியை 'பெரியார்' என்று முதன் முதலாக அழைத்தார். ஒரு பெரியாருக்கு இருக்கவேண்டிய தன்மைகளை அவர் பின்வரு மாறு சுட்டிக்காட்டினார்: 1. அவரைப்பற்றி உலகத்தார் வேண்டும். தப்பபிப்பிராயம் கொள்ள 2. அவரது கொள்கைகள் எங்கும் கண்டிக்கப்படவேண்டும். 3. அவர் கடுமையாக வையவும் சபிக்கவும்படவேண்டும்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/177
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை