பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 புரட்சியாளர் பெரியார் இத்தகைய மூன்று தன்மைகளையும் பெற்றவர் ஈ.வே.ராமசாமி என்று, அவரது திருவுருவப் படத்தை திருநெல்வேலியில் திறந்து வைத்தபோது, உண்மையிலேயே இவர்தான் பெரியார் என்றழைத் தார். ஈராயிரம் ஆண்டுகளாக மக்களைச் சிறுமைப்படுத்திவரும் சாதி ஏற்றத்தாழ்வு, அதன் தீய விளைவுகளாகிய தீண்டாமை, நெருங்காமை, உடனிருந்து உண்ணாமை ஆகிய கொடுமைகளுக்கு எதிரான மெய்யான ஆற்றல்வாய்ந்த அணுக்குண்டான தன்மான இயக்கத்தை தமிழ்நாடு தழுவிய இயக்கமாக்கிய சாதனை செயற் கரியதே. அதைச் செய்த சிங்கத்தை ராமசாமிப் பெரியார் என்று பெருமிதத்தோடு அழைக்காமல் எப்படி அழைப்பார்கள்? ஏறத் தாழ ஒன்பதாண்டு காலம் பொதுமக்கள் ராமசாமிப் பெரியார் என்று அழைத்துப் போற்றிய பிறகு, தமிழினத்தின் தாய்க்குலம் 13-11-1938இல் சென்னையில் 'தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாகக்கூடி அம்மாநாட்டில் ஈ. வே. ராவின் பெயருக்குமுன் 'பெரியார்' என்னும் அடைமொழி கொடுத்து அழைக்கவேண்டு மென முடிவு செய்தது. தளபதி சி.என். அண்ணாதுரையை தமிழ் மக்கள் பல்லாண்டு காலம் அறிஞர் என்று அழைத்த பிறகுதானே, அண்ணாமலை பல்கலைக் கழகம் அதற்குரிய 'டாக்டர்' பட்டத்தைக் கொடுத்தது. தமிழர்கள், அடையாளங் கண்டு உரியபடி போற்றுவதற்குள் பொழுது சாய்ந்துவிடுவது, பழைய கதை; தொடர் கதை. கருமியல்ல, சிக்கனமானவர் பெரியார் சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர். அவர் தன் னுடைய செலவைப் பொருத்துமட்டும் சிக்கனத்தை கடைப்பிடிக்க வில்லை. பிறர் தனக்கு செலவு செய்தபோதும் அதே துலாக் கோலைப் பயன்படுத்தினார். மண்ணோடு மண்ணாக, கண்டவர்களுக்கெல்லாம் மண்டியிட்டுக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை அடி தெரியக் கலக்கிய, தன்மான இயக்கத்தின் தந்தை ஈ. வே. ராமசாமியை 1935இல் நான் தற் செயலாகக் காண நேர்ந்தது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் 403 எண் வீட்டில் குடியிருந்த நண்பர், குத்தூசி குருசாமியைக் காணச்சென்றேன். வழியில் கண்ட நண்பரொருவர், ராமசாமிப் பெரியார் அவ்வேளை அங்கு இருப்பதாகக் கூறினார். அருகில் இருந்த பழக்கடைக்குச் சென்றேன். நாலணா கொடுத்து ஆஸ்திரேலிய ஆப்பிள் பழம்