பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புரட்சியாளர் பெரியார் கொண்டது முதலியார், பிள்ளை, நாட்டார், நாடார், நாயக்கர், நாயுடு, ரெட்டியார், செட்டியார் இவையெல்லாம்.' இவர்கள் அத்தனை பேருக்கும் சாத்திரோக்தமா ஒரே பேர்தாண்டா உண்டு. அதுதாண்டா 'சூத்திரன்' என்பது. இன்னும் புரியலை யோடா மண்டு. நீயும் சூத்திரந்தாண்டா? 'பகவான் படைத்தபோது நான்கு வருணம். இப்போது கலியுகம் இல்லையோ! இப்போது இரண்டே வருணந்தாண்டா உண்டு. பிராமணாள்; அது நாங்கள்; சூத்திராள் அது மற்றவர்களெல்லாம். நீயுந்தாண்டா தடியா?' இப்படி விளக்கம் வந்தது. சூத்திரன் என்றால் என்ன சாமி அர்த்தம்?' கீழ்க்குரலில் கேட்டான் ஆறுமுகம். 'அடிமை; பிராமணாளுக்கு பணி செய்யப் படைக்கப்பட்ட வர்கள். வைப்பாட்டி மக்கள். இப்படி நான் சொல்லவில்லை. பெரியவா எழுதின சாத்திரம் சொல்லுது.' இது தீட்சிதரின் விளக்கம். ஆறுமுகத்துக்குச் சிற்றெறும்பு கடித்ததுபோல் இருந்தது.முதுமைக் கோடுகள் நிறைந்த முகத்திலும் வேதனை வடு தென்பட்டது. நொடியில் சமாளித்துக்கொண்டார். முறுவலை வரவழைத்துக் கொண்டார். 'சாமி! நான் உங்க அடிமை சாமி! இப்ப மட்டுமா? எல்லாப் பிறவிகளிலும் தேவாளுக்கு அடிமையாகக் கிடக்கக் கொடுத்து வைக்கவேண்டுமே! சாமிக்கே தெரியும் நான் பணி செய்கிற சாதி என்று. ஆனால் - ஆனால்- ஊரிலே - எல்லோருமே- நான் எங்க அப்பாவை-உரிச்சு வைத்ததுபோல்-இருக்கேன் என்று- சொல்லுவாங்க சாமி - அப்படியிருக்க கடைசியாக-ஒன்று- சொல்லிவிட்டிங்களே. இப்படிக் குறைபட்டார், எண்பது வயது ஆறுமுகம். நாற்பது வயது தீட்சிதர், அமைதியாக பதட்டமே இல்லாது. 'அதற்குத்தாண்டா! அப்பவே சொன்னேன்! பெரியவா எழுதிய சாத்திரம் சொல்லுது என்று சொன்னேன். பெரியவா, அவாளா நினைத்து எழுதினாளா? அப்படிப்பட்ட அபசாரம் அவாளெல் லாம் நினைக்கக்கூட மாட்டா!" 'பகவானே சொல்லச் சொல்ல. மகான்களே கேட்டுக் கேட்டு எழுதிவைத்தவை நம் சாத்திரங்கள். மற்ற மற்ற மத வேதம் போலவா நம்முடைய வேத சாத்திர புராணங்கள்? அனாதி காலந் தொட்டு வருபவை; அவற்றைப்பற்றிப் பேச நமக்கு ஏது அருகதை? எதற்கும் ஆண்டவன் இருக்கிறான். அவன் கமலத் திருவடிகளில் பாரத்தை வைத்து. சும்மா இரு ஆறுமுகம்.'