பெரியாரின் தனித்தன்மை 169 உடன் வந்தவர்கள், உணவு அருந்தினார்கள். பெரியார் பக்கத் தில் நான் உடகார்ந்திருந்தேன். நான் பெரியவர்களிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப்போவதைப் பலர் தவறாகக் கருதுகிறார்கள்-இறுமாப்பு என்று எண்ணுகிறார்கள். உண்மையான காரணம் என்ன? எவ்வளவு பெரியவரோடு பேச நேர்ந்தாலும், குழைந்து பேசாமல் உள்ளதை உள்ளபடியே உளறி விடும் குறை உடையவன், நான். அன்று பெரியாரோடு பேசும் போது அக்குறை வெளிப்பட்டது. 'அய்யா! நீதிக் கட்சிக்கு நல்ல தலைவர் தேவை. அதேபோல, தன்மான இயக்கத்திற்கும் ஒருவர் தேவை. முந்தியதற்கு, சில பேர்களாவது நினைவுக்கு வரும். தன்மான இயக்கத்திற்கு, சாதி ஒழிப்பு இயக்கத்திற்கு, குருட்டு மூட நம்பிக்கையைத் தகர்க்கும் இயக்கத்திற்கு, ஈராயிரத்து அய்ந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தாங்கள் ஒருவரே கிடைத்திருக்கிறீர்கள். புரட்சிக்கு தலைமை தாங்கவேண்டிய தாங்கள் ஒரு கட்சிக்குத் தலைவரானது எனக்குப் பிடிக்கவில்லை. தன்மான இயக்கத்தின் வேலை சூடு பிடிக்காது என்று அஞ்சுகிறேன்' என்றேன். நொடியும் தயங்காது, 'அய்யா சொல்வது, தப்பல்ல. அப்படித்தான் நானும் நினைக் கிறேன். நான் என்ன செய்யட்டும்? நான் சிறையில் இருந்தபோது, இப்படிச் செய்துவிட்டார்கள். 'சர் பன்னீர்செல்வம், தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்கும் நம் இயக்கத்திற்கும் பெரும் ஆதரவு கொடுத்தவர். அப்படிப்பட்ட வர்களின் முடிவை தட்டிவிட வெளியிலா இருந்தேன்? மெல்ல, நீதிக் கட்சியை நம் வழிக்கு மாற்றுவோம். இல்லாவிட்டால், சரியான தருணம் பார்த்து, வேறொருவரிடம் ஒப்படைத்துவிடுவோம்' என்றார். உணவருந்திக்கொண்டிருந்த எஸ். வி. லிங்கமும் பொன்னம் பலனாரும் பெரியாரிடம் வந்தபோது, 'அத்தான் ஏதோ சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டோம்' என்றார்கள். பெரியார் அப்போதாவது வெகுளுவாரென்று எண்ணி ஏமாந்தேன். வெகுளா மல், 'அவர் சொல்வது, தன்னுடைய ஆதாயத்துக்கு இல்லையே. மக்கள் நன்மையைக் கருதியே சொல்லுகிறார், அதில் பொருள் இருக்கிறது' என்றார். பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பின் பொதுக் கல்வி இயக்குந ரானேன். பதின்மூன்று ஆண்டுகள் மாநிலத்தின் பெரிய அதிகாரி யாக இருந்தேன். தந்தை பெரியார், ஆண்டுக்கு இரண்டொரு வருக்குப் பரிந்துரை கொடுத்தால் பெரிது. அப்பரிந்துரைக் கடி தங் அவருடைய நம்பிக்கைக்கு உரிய தோழர் குத்தூசி களை
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/181
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை