பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 புரட்சியாளர் பெரியார் கென்று ஒன்றும் செய்யவில்லையே என்று குறை ஏற்படும். அவர்கள், 'பெரியாரா? அவர் கருமியாயிற்றே' என்பார்கள். துல்லிய கணக்கு உண்மை என்ன? காங்கிரசில் இருந்த காலத்திலும் சரி, பிந்திய நீண்ட பொது வாழ்க்கைக் காலத்திலும் சரி, நாள்தோறும் பல பேர், பெரியார் வீட்டில் உண்டு போவதோடு நிற்கவில்லை. அவர்களிலே பல பேர்கள் பண உதவியும் பெற்றுப் போவார்கள். எத்தனை ஆயிரம் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் இயக்கப் பேச்சாளர்களை தன் சொந்தச் செலவில் அழைத்துக்கொண்டு போய் இருந்தார்; அனுப்பி வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டு காலமாகினும் பெரியார், பெரிதும் தன் பணத்தைச் செலவு செய்து இயக்கம் நடத்திய பிறகே, பொதுக் கூட்டங்களுக்கு அழைப்போர், பயணச் செலவை ஏற்கும் நிலை ஏற்பட்டது என்பதை நினைவுறுத்துவது என் கடமை. பெரியார், சிக்கனக்காரர் ஆக இல்லாமல், ஓட்டைக் கையராக இருந்திருந்தால், தன்மான இயக்கம், அய்ந்தாறு ஆண்டுக்குள், நிதி வசதியில்லாமல், கூட்டம் நடத்த முடியாமல் மறைந்துபோயிருக்கும். குறைந்தது ஆண்டுக்கு ஆயிரம் கூட்டங்களிலாவது, பெரியார் பங்குகொண்டார். பிற்காலத்தில் கூட்டந்தோறும் மாலைக்குப் பதில் சிலரோ, பலரோ, சிறு தொகையோ, பெருந்தொகையோ அளித்தது உண்மை. அய்ம்பது காசு கொடுத்திருந்தாலும் அதை அப்போதைக்கப்போது குறித்து வைத்து, ஒழுங்காகப் பணத்தைக் காத்து, கணக்கோடு பொதுத் தொண்டிற்கு விட்டு வைத்தவர் பெரியார். கல்லூரிக்கு நன்கொடை தமது குறிக்கோளை அடைவதற்குத்தக்க பெரியார் தயங்கியதில்லை. பார்ப்பனர் மென்பதில் பெரியார் முனைப்பாக இருந்தார். விலை கொடுக்க அல்லாதார் கல்லூரிக் கல்வி பெற வேண்டு எனவே, பெரியார், திருச்சியில் கலைக் கல்லூரி ஒன்றைத் தொடங்குவதற்காக, அய்ந்து இலட்சம் ரூபாய்களை அரசுக்கு நன்கொடையாக வழங்கியது நாடறிந்த செய்தியாகும்.