பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியாரின் தனித்தன்மை தன்னைப்பற்றி என்று 175 1948ஆம் ஆண்டு, சென்னை மாகாணத்தை காங்கிரசு அமைச் சர்கள் ஆட்சி புரிந்தார்கள். அப்போது, இரண்டாவது முறை யாக, ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை, இந்தி கட்டாய பாட மென்று திணிக்கப்பட்டது. எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் ஆணையிட்டது. காங்கிரசு ஆட்சி. இதை முன்னரே குறித்துள்ளோம். பெரியாருக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் அவருடைய இயக்கத்திற்கும் பற்பல தொல்லைகளைக் காங்கிரசு ஆட்சி கொடுத்தது; தடைகளை விதித்தார்கள். அன்னிய ஆட்சியோ பார்ப்பன ஆட்சியோ, கொடுக்காத தொல்லைகளை, பார்ப்பனரல்லாதாரை முதல்வராகவும் பெரும்பாலான அமைச் சர்களாகவும் கொண்ட ஆட்சி செய்வதை நாடறியச் செய்யவும் தம்முடைய நிலையை விளக்கவும் அதை நல்ல வாய்ப்பாகப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். 'நான் யார்' என்ற தலைப்பில், தந்தை பெரியார், 1948ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 'விடுதலை' நாளேட்டில் பின்வருமாறு எழுதினார். A அன்புள்ள திராவிட மந்திரிமார்களே! நான் யார்? உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் உத்யோகம் பதவிபற்றி பொறாமைப்படுகிறவனா? அல்லது இந் நாட்டை பவனா? அன்னியனுக்குக் காட்டிக் கொடுப் அப்படிச் செய்தாவது ஏதாவது பயன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ நிலையிலோ, உள்ளவனா? இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் கொண்டவனா? உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா? தரத்தையாவது உயர்த்திக் எந்தப் பார்ப்பனருக்காவது நான் சொந்தத்தில் எதிரியா?