பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியாரின் தனித்தன்மை 177 தினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.' 'இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே "அடிப்படையாகக்கொண்டு" கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதினால் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத்தொண்டு செய்பவ னுக்கு இது போதும் என்றே கருதுகிறேன். ' திராவிடர் திராவிட சமுதாயம் என்பதுபற்றி பெரியார் கண்ணோட்டத்தில் ஒரு விளக்கம். தென்னகத்தில் உள்ள பார்ப்பனர்கள் தங்களை, ஆரியர்கள் என்று உண்மைபற்றியோ, உரிமைபற்றியோ இரண்டும் இல்லாமலோ நெடுங்காலமாக அழைத்து வருகிறார்கள்; மற்ற இந்துக்களை அவர்கள் 'சூத்திரர்' என்றே அழைத்து வந்தார்கள். ஏதோ கிராமப் புரோகிதனோ அர்ச்சகனோ இப்படிச் சொன்னார் கள் என்று அலட்சியப்படுத்தமுடியாத நிலையே நீடித்து வந்தது. பார்ப்பனர்கள் எவ்வித முற்போக்கு வாதிகளானாலும் தனி வாழ்க்கையில் பூணூலை நீக்கிவிட்டு, கலப்புத் திருமணத்தைச் செய்து பார்த்து மகிழ்ந்த பெரியவர்கள் ஆனாலும், பார்ப்பன ரல்லாதாரை 'சூத்திரர்' என்று கருதுவதும் சொல்லுவதும் தங்க ளுடைய இரண்டாவது இயற்கையாக இருந்த நிலை, நேற்று வரை தொடர்ந்தது. பார்ப்பனர்கள், 'சூத்திரர்கள்' என்று எவருக்குப் பட்டம் சூட்டி வந்தார்களோ அவர்களைப் பெரியார் 'திராவிடர்' என்று அழைத் தார்! இப்பட்டியலில் சேர மறுத்தால் தாங்கள் சூத்திரப் பட்டிய லில்தான் இருக்கவேண்டும். எனவேதான், 'மனித இன'ப்பற்று மட்டுமே பகுத்தறிவு வாதிகளுக்கு இருக்கலாம் என்று சொன்ன பெரியார், நம்மை நடைமுறை விவகாரங்களுக்கு திராவிடர் என்று திராவிடர்களா? அழைத்தார். எனவே நாம் தமிழர்களா? என்னும் குழப்பம் தேவையில்லை. பெரியாரின் சமூக இழிவு நீக்கப் பணியை காமராசரும் வெளிப் படையாகப் பாராட்டினார்: முதல் தன்னாட்சி இந்தியாவில், சென்னை மாகாணத்தின் அமைச்சராக இருந்து திரு. சி. இராசகோபாலாச்சாரியார் ஈராண்டு ஆட்சி செய்தார். அப்போது, மதுரையில் டி. வி. எஸ். நிறுவனத்தின் பெருவிழாவொன்று நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களில், முதல் அமைச்சர் இராசகோபாலாச்சாரியார், தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவர் கு. காமராசரும் இருந்தார்கள். 12