பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை 7 தீட்சிதருக்குத் திருப்தியில்லை. ஆறுமுகத்தின் புத்தியைத் தீட்ட முனைகிறார். 'ஏண்டா ஆறுமுகம்! நான் சொல்லுகிறேன் கேள்: உனக்கு நான் முகன் தெரியுமில்லையோ! நான்முகன். சாட்சாத் பிரமனே நம்மையெல்லாம் மேலும் கீழுமா படைத்தான். ஏன்? அது நமக்கு எப்படிடா புரியும்? 'முகத்திலிருந்து பிராமணர்களைப் படைத்தான். அவர்களைப் பாதுகாக்க, சத்திரியர்களைப் படைத்தான். எங்கேயிருந்து படைத்தான்? தோளிலிருந்து படைத்தான். அப்புறம் தொடையி லிருந்து வைசியர்களை உண்டாக்கினான். கடைசியாக உங்களைக் காலிலிருந்து படைத்தான். நீங்கள் சூத்திரர்கள். ஞாபகமிருக் கட்டும். நாம் இருக்கும் கலியுகத்தில், பிராமணாள் உண்டு; சூத்தி ராள் உண்டு. சத்திரியர், வைசியர் என்று எவனாவது சொன்னா நம்பாதே.சாத்திரத்திற்கு மாறாகச் சொன்னால் நெருப்பாற்றிலே, மயிர்ப் பாலத்தில், பாம்பும் நட்டுவாக்களியும் கடிக்கக் கடிக்க நடக்கணும். சிவ! சிவ! நமக்கு ஏன் அந்த நரகம்? சாத்திரம் சொன்னதைக் கேட்டு நடந்துவிட்டுப் போவோம்.' இப்படி முடிப் பார் தீட்சிதர். பணி செய்யத்தான் ஆறுமுகங்கள். அவர்கள் முகத்தில் இருந்தவையோ புண்கள். கண்ணிருந்தும் குருடர்கள்; எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். சிந்திக்கும் பழக்கத்தை அய்ந்து வயதோடு அவித்துவிட்ட அரும் பிறவிகள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' கேள்விப்பட்டதுமில்லை பொதுமக்கள். தமிழ் மறையையா பொதுமக்கள் கேள்விப்பட்ட தில்லை?ஆம் ஆம். படித்தவர். எங்கோ சிலர். திருக்குறளைப் படித்தவர், அவர்களில் ஆயிரத்தில் ஒருவர்; அறிவை மற்றவர்க ளோடு பங்கிட்டுக்கொண்டவர்கள், எங்கெங்கோ தேடினால் பதினாயிரத்தில் ஒருவர் கிடைக்கக்கூடும். எழுத்தறிவு என்பதே, ஊர்க் குருக்கள், ஊர்க் கணக்கர், ஊர் வரித் தண்டல்காரர், அவர்களோடு கூடிக் கெட்ட யாரோ ஒருவர் இருவர்களோடு முடிந்துவிடும். புலமை என்பது புராணிகரோடு காலட்சேபக்காரரோடு, ஜமீன்தாரை அண்டிப் பிழைத்த சில ரோடு முடங்கிவிடும். இவர்களில் படித்த பெண்களைப் பார்ப்பது அரிது; அரிதினும் அரிது. 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே' என்பது மனுசாத்திரம். இப்படிக் கேள்வி. ஏனெனில், நாம் படிக்கக்கூடாததாயிற்றே.