180 புரட்சியாளர் பெரியார் பெரியார், உலகப் பெரியாரே என்னும் உணர்வோடு, பெருநடை யோடு, வீடு திரும்பினேன். பெரியவர்களை மட்டுமா பெரியார் மதித்தார்? இல்லை. எல் லோரையும் மதித்தார். அரும்புமீசை மாணவர் நெருங்கினா லும் எழுந்து நின்று வரவேற்பதும், போகும்போது, மீண்டும் எழுந்து நின்று வழியனுப்புவதுமான பெருந்தன்மை பெரியாரின் தனிச் சிறப்பாகும். வைதீகர்கள், வெல்லக்கட்டியைக் கிள்ளி, வெல்லப் பிள்ளை யாரைச் செய்துவைப்பார்கள். மீண்டும் கொஞ்சம் வெல்லத்தைக் கிள்ளி, அதே வெல்லப் பிள்ளையாருக்குப் படைப்பார்கள். அதேபோல, தந்தை பெரியார், எங்கெங்கோ இருந்த எண்ணற்ற வர்களை தன்மானமுள்ள, பகுத்தறிவைப் பயன்படுத்தும் தொண்டு செய்யும் மனிதர்களாக்கினார். அவர்களுக்குப் பெருமை செய்து மகிழ்ந்தார், மானுடத்தின் பக்தராகிய, தந்தை பெரி யார் ஈ.வே. ராமசாமி. செட்டி நாட்டரசர், டாக்டர் எம். ஏ. முத்தையாவிற்கு மணிவிழா. வைதீக முறைப்படி 2-8-1965 அன்று செட்டி நாட்டில் சிறப்பான விழா எடுத்தார்கள். பல்லாயிரவர் கண்டு மகிழ்ந்தார்கள். அதில் நானும் ஒருவன். சில நாட்களுக்குப்பின் 11-8-1965 அன்று மாலை மணிவிழாவையொட்டி, சென்னை செட்டிநாடு மாளிகையில், தேனீர் விருந்து நடந்தது. எத்தனை ஆயிரம் பேர்கள் உண்டு மகிழ்ந்தார்கள் என்ற கணக்கு எளிதில் பிடிபட்டிருக்காது. அவ்வளவு பெருங் கூட்டம். தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமியும் அவர் துணைவியார் மணியம்மையும் தொடக்கத்திலேயே-அய்ந்தரை மணிக்கே வந்து கலந்துகொண்டார்கள். என் மனைவி காந்தம்மாவும் நானும் ஆறு மணிபோல் காரில் செட்டிநாட்டு மாளிகைக்குள் நுழைந்தோம். உள்ளே நுழையும் நெடுவழியில், பாதியில் சக்கர வண்டியில் தந்தை பெரியார் அமர்ந்து காத்துக்கொண்டிருந்தார். அருகில் திருமதி மணி அம்மையாரும் சில தோழர்களும் இருந்தார்கள். பெரியாரின் 'வேன்னை' எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள். பெரியாரைக் கண்டதும் என் காரை சட்டென்று நிறுத்தச் சொன்னேன். அவருக்கு அய்ந்தாறு மீட்டர் தொலைவில், நான் காரைவிட்டு இறங்கி, நடந்தேன். இல்லை, பசுவைக் கண்ட கன்றைப்போல் ஓடினேன். அதற்குள், மணியம்மையார், பெரியார் இடம் காதில் 'நம்ம டைரெக்டர் வருகிறார்' என்று சொன்னார் கள். அதுவும் என் காதில் வீழ்ந்தது. அடுத்த நொடி, பெரியார் ,
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/192
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை