பெரியாரின் தனித்தன்மை 181 தடியை ஊன்றிக்கொண்டு, எழுந்து நின்றார். நான் பதறிப் போனேன். வீழ்ந்தடித்துச் சென்றேன். 'அய்யா! நான் உங்கப் பையன். என்னைக் கண்டு தாங்கள் நிற்கலாமா?' என்று பதைப்போடு உருகினேன். சுந்தரவடிவேலு நம்ம பிள்ளை. டைரெக்டருக்கு என்ன மரியாதை கொடுக்கவேண்டுமென்று மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாமா?' என்று பதில் கூறினார். கையைப் பிடித்துக் குலுக்கினார். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. மெல்ல, பெரியாரை நாற்காலியில் அமரச்செய்தோம். 'வேன்' வந்ததும் பெரியாரை அனுப்பிவைத்தோம். வாழ்நாள் முழுவதும் புரட்சி சிந்தனைகளிலும் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டிருந்த பெரியார் சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் முன்னின்றார். அறிஞர் அண்ணா மறையவும் 'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்து மற்றொன்று ஆகும்' என்னும் நிலை உருவாயிற்று. அய்ந்தாண்டில் தமிழ்நாட்டு முதியோர் அனைவரையும் எழுத் தறிவு உடையவர்களாக்கிவிடவேண்டும்; மாணவர்களும் ஆசிரியர் களும் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடாது. இவ்விரு கொள்கைக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். இவ்விரண்டு பணிகளுக்காக, பெரியார் விரும்பியபடி, முதல் அமைச்சர், பேரறிஞர் அண்ணாதுரை புதுதில்லி, இந்திய கல்வி அமைச்சகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த என்னை, தமிழ்நாட்டு அரசின் முதன் மைக் கல்வி ஆலோசகனாக அழைத்துவந்தார். அவர் மறையவும் நான் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வேண்டிய நிலை வந்தது. தந்தை பெரியாரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். நான் துணைவேந்தராக இருந்தபோது, ஈரோடு சிக்கைய கல்லூரியில் சங்கடமான நிலையொன்று உருவாயிற்று. அது என்ன? தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆறு, ஏழு துணைப் பேராசிரியர் களின் பணி, அடுத்த கல்வியாண்டில் தேவையில்லை என்று, அவர் களுக்கு வேலை நீக்க அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் கொதித்தார்கள். பல்கலைக் கழகத்திற்கு எழுதினார்கள். வேலை நிறுத்தம் தொடங்க நேரிடும் என்பதும் புலனாயிற்று. வேலை நீக்க அறிவிப்பு சரியா தப்பா என்று பல்கலைக் கழகம் முடிவு சொல்லவேண்டும். அதற்குமுன், கல்லூரி நிர்வாகத்தின் வாதத்தைக் கேட்கவேண்டும். இது விதிமுறை.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/193
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை