182 புரட்சியாளர் பெரியார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் தந்தை பெரியார் ; தாளாளர் திரு. கோவிந்தராசன். 'தன்னை எந்த நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கும் எதிர்பார்க்கக்கூடாது; தன்னிடம் நன்கொடை எதிர்பார்க்கக்கூடாது' என்னும் இரு நிபந்தனைகளின்பேரில், தந்தை பெரியார் குழுத் தலைவராக இருந்தார். ஒரு குழுக் கூட்டத்திற்கும் பெரியார் சென்றதில்லை. பெரியாருக்கும் மேற் கூறிய வேலை நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்பது எனக்குத் தெரியும். மேலும், எல்லாக் கடிதப்போக்குவரத்துகளும் தாளாள ரோடுதான் என்பது விதிமுறை. இருப்பினும், பெரியாருக்கு நியாயத்தைப் புரியவைப்பது எளிது என்பது என் அனுபவம். எனவே, திருச்சியில் தங்கியிருந்த தந்தை பெரியாரிடம் தொலை பேசியில் பேசினேன். 'ஈரோடு சிக்கைய்யா கல்லூரியில் ஆறேழு துணைப் பேராசிரியர் களுக்கு வேலை நீக்க அறிவிப்பு கொடுத்துள்ளார்கள். அது பெரிய சிக்கலை எழுப்பியுள்ளது. நான், நான்கு நாட்களில் திருச்சி வரவேண்டும். அப்போது தங்களோடு நேரில் பேசுகிறேன். அதுவரை தாளாளர் மேற்கொண்டு ஒன்றும் செய்யவேண்டா மென்று சொல்லுங்கள்' என்று கேட்டுக்கொண்டேன். 'வைஸ்சான்சலர் அய்யா என்னைத்தேடி வரவேண்டாம். நானே தங்களைப் பார்க்கவருகிறேன். அதற்குள் கோவிந்தராச னோடு பேசிவிட்டு, தகவல்களோடு வருகிறேன்' என்றார் பெரியார். 'தகவல்களைச் சேகரித்துக்கொள்ளுங்கள். நான் வரும்போது உதவியாக இருக்கும். தயவுசெய்து தாங்கள் வரவேண்டாம்' என்று வேண்டினேன். பெரியார் திட்டவட்டமான பதில் சொல்ல வில்லை. மூன்றாம்நாள் மாலை, அய்ந்தரை மணியளவில், விடுதலை அலுவலக நிர்வாகி, திரு. நா. ச. சம்பந்தம் என்னோடு தொலை பேசியில் பேசினார். 'அய்யா திருச்சியிலிருந்து இப்போதுதான் வந்துள்ளார்கள். தாங்கள் வீட்டிலிருக்கிறீர்களாவென்று விசாரிக்கச் சொன்னார்' என்றார். நான் 'இங்கே வருவதற்காக அப்படிக் கேட்டிருக்கலாம். தயவு செய்து, பெரியாரிடம் தகவல் கொடுக்காமல் பத்துப் பன்னிரெண்டு மணித் துளிகள் தப்பிவிடுங்கள். நான் அதற்குள் அங்கு வந்து விடுகிறேன்' என்றேன். திரு. சம்பந்தம் 'மன்னிக்கணும். அய்யா கோபப்படுவார்'
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/194
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை