பெரியாரின் தனித்தன்மை கோவிந்தராசன் புன்முறுவலோடு, 185 'அப்படியே ஆகட்டுங்கள்' என்று சொல்லி ஒரடி, எடுத்து வைத் தார். அப்போது பெரியார், "ஏன்? நான் சொன்னபடி சந்தானத் தைக் காரியங்களைக் கவனிக்கச் சொல்" என்று கூறி விடை கொடுத்தார்.' கோவிந்தராசன் சென்ற பிறகு, 'அவர் தாளாளர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டார்; சந்தானத்தைத் தாளாளராகப் போட்டுவிட்டேன்' என்று பெரியார் விளக்கம் சொன்னார். பதறிப்போனேன். 'அது எதற்கு அய்யா? கோவிந்தராசனே தொடர்ந்து இருக்க லாமே' என்று நான் சொன்னபோது, மனிதர்களே; "என்ன இருந்தாலும் இருதரப்பாரும் அவநம்பிக்கையோடே எதையும் பார்ப்பார்கள். புதியவர் வந்தால் புதிய கண்ணோட்டம் வரலாம். 'பாருங்கள்-சம்பந்தம் பண்ணிய தப்பு “அய்யா” வரும்படி ஆயிற்று. மன்னிக்கணும்' என்றார், உலகப் பெரியார் ராமசாமி. 4 இந்த மன்னிப்பு கேட்க, முந்நூற்று இருபது கிலோ மீட்டர் தூரம், வேன் இல்லாததால், காரில், கடும் வெய்யிலில் வந்த முதியவருக்கு ஆசிரியர் சமுதாயம் எப்படி நன்றிசெலுத்தப் போகிறதோ! இந்திய அரசுக்கு ஆதரவு. திராவிட நாட்டுப் பிரிவினைக்குப் போராடிய பெரியார், அப் போராட்டங் காரணமாக பல்முறை சிறை வாழ்க்கையும் ‘பூம்பூம்' மாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பு அலைகளையும் தாங்கிக்கொள்ள நேர்ந்தது வரலாற்று உண்மைகளாகும். அத்தகைய தந்தை பெரியார் ராமசாமி விடுதலை பெற்ற இந்தியா சிக்கிக் கொண்ட எல்லாப் போர்களிலும் இந்திய அரசுக்கு ஆதரவாகவே நின்றார்; எழுதினார்; பேசினார். பிரிவினைவாதியாம் தந்தை பெரியார் எவ்வளவு இந்தியப் பற்றாளராக விளங்கினார் என்பதை உணரும் அரிய வாய்ப்பு ஒருமுறை எனக்குக் கிட்டியது. 1971ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், கடைசி வாரம், பெரியார், சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது நான், சோவியத் நாட்டில் பதினைந்து நாட்கள் சுற்றுப் பயணஞ்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/197
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை