பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 புரட்சியாளர் பெரியார் பெரியார், 'இந்த அம்மாளுக்கு நான் பரிந்துரைக்கவில்லை. அவர்கள் வாங்கிய மதிப்பெண்ணே இடம் தேடித் தந்திருக்கும். இல்லையென்றால் வேறு எவரோ உதவியிருக்கலாம். என்னாலே இடம் கிடைக்கவில்லை' என்று, குழந்தைகளுக்கே இயல்பான தன்மையில் உண்மையை வெளியிட்டார். இருந்தால் என்ன அய்யா! அப்போதே சொன்னேனே அய்யா! தங்கள் வாழ்த்தே பலிக்குமென்று. தாங்கள்தானே எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவு, பாதுகாவல், நம்பிக்கை, வாழ்வு.' நெஞ்சுருகக் கூறினார், டாக்டர் சற்குருதாஸ். இந்நிகழ்ச்சியை 6-1-'74 அன்று திருச்சியில் நடந்த பெரியார் இரங்கல் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார், டாக்டர் தாஸ். மற்றவர்களைப்போல, அமுத்தலாக இருந்திருக்கவில்லை, பெரியார். எப்படியோ கிடைத்த வெற்றிக்கு தான் பொறுப் பில்லை என்று நன்றி சொல்லும் எங்களிடமே சொல்லத் தேவை யில்லை. உண்மை; முழு உண்மையில் பெரியாருக்கு இருந்த பற்றல்லவா அவரை அப்படிச் சொல்லச் செய்தது? பெரியாரின் வாய்மையை, நிகழ்ச்சியை நினைக்குந்தோறும் உள்ளம் உருகு கிறது' என்று உருக்கத்தோடு உரையாற்றினார். நேரில் கேட்ட என் போன்ற பல்லாயிரவர் கண்கள் குளமாயின. இராசாசியின் பாராட்டு எப்போதோ ஒருமுறை பெரியாரைப் பார்த்த திரு.சற்குருதாஸ் மட்டுமா பெரியாரின் உண்மைத் தன்மையைக் கண்டு உருகினார்? பொது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் ஈ. வே. ராவின் குருவாய், நண்பராய் தோழராய் விளங்கியவரும், பின்னர் பல்லாண்டு காலம் எதிரும் புதிருமாக விளங்கியவருமான மூதறிஞர் இராசகோபாலாச்சாரியாரும் பெரியாரிடம் அத்தகைய சிறப்பினைக் கண்டார். காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி தென்னிந்திய வர்த்தக சபை நடத்திய கூட்டத்தில் பேசிய இராசகோபாலாச்சாரியார் 'பெரியார் யோக்கியமானவர், நாணயமானவர் என்றே நான் நினைக்கிறேன். அவருடைய சிலைக்கு அடியில் என்ன எழுதப் பட்டுள்ளனவோ அவற்றை பலபேர் ஆட்சேபிக்கின்றனர். ஆனால் நான் ஆட்சேபிக்கவில்லை. ஒருவர் எந்தவிதமான மனிதரோ அதையும் நாம் அறிந்துகொள்வது நல்லதே' என்று குறிப் பிட்டார். இத்தகைய இழையளவு பொய்யும் கலவாத உண்மை உணர்வு அல்லவா பெரியாரை, காங்கிரசின் வாய்ப்புகளை நொடியில் உதற