190 புரட்சியாளர் பெரியார் முணர்ந்து கடனாற்றல்; காலத்துக்கேற்ற சீர்திருத்தஞ் செய்ய முனைதல் -- முதலியன.' அறத்தொண்டு கனிந்த வாழ்வினர் ஈ. வே. ரா. என்பதற்கான அறிகுறிகள் அனைத்தையும் நாம் கண்டோம். திறனுடையார் என்பதும், கருத்து F. Cal. TIT. நட்புத் திறனுடையார் வேற்றுமைக்கு மதிப்பளிப்பார் என்பதும் விளங்குதல் காண்க.' பெரியாரின் அஞ்சாமை இயல்புக்கு சான்றாக, திரு.வி. கல்யாணசுந்தரனார், காட்டிய நிகழ்ச்சி இதோ: 1924இல் ஈ.வே. ரா. மயிலாப்பூர் மந்தைவெளியில் ஒரு சொற் பொழிவு ஆற்றினார். அதற்காக, அவர்மேல், 124 ஏ பிரிவின்படி 'அரச வெறுப்பு' வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை யின் பொருட்டு அவர் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்திருந் தார். நாளை வழக்கு விசாரணை. எத்தனை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்போகிறார்களோ என்ற கவலை எனக்கு. இரவு உண்டிக்குப்பின், பாலசுப்ரமணிய பக்த ஜன சபையின் வெளித் திண்ணையில் நானும் ஈ. வே. ராவும் படுத்திருந்தோம். இரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை. ஈ. வே. ரா. கவலை யின்றிக் குறட்டை விட்டுக்கொண்டு தூங்குகிறார். நடு இரவில் விடா மழை பெய்தது. குளிர் காற்றும் வீசிற்று. நான் எழுந்து உட்கார்ந்துகொண்டேன். F. Cal. TIT. அப்பொழுதும் கவலை யின்றி உறங்குவதைக் கண்டேன். அவருடைய மனம் இரும்பு மனம் என்று நினைத்தேன். காலையில் எழுந்ததும் 'இரவு மழை பெய்தது தெரியுமா?' என்றேன். 'தெரியாது; நன்றாய்த் தூங்கி விட்டேன்' என்றார். அப்பொழுதுதான் ஈ. வே. ராவின் அஞ்சா நெஞ்சத்தை அறிந்தேன். துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாத வீரத்தையும் உணர்ந்தேன். பண்பாளர், தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி என்றால், நாத்திகர் என்னும் காட்சியே முதலில் மின்னும். அது தவறும் அல்ல. அந்த நாத்திகர், கடவுள் நம்பிக்கையாளரிடம் எவ்வளவு பண்போடு நாகரீகத்தோடு நடந்துகொண்டார் என்பதை வெளிப்படுத்தும் மூன்று நிகழ்ச்சிகளைக் காண்போம். பல்லாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில், பள்ளியின் பொற் காலம் நிலவியது. ஊர்தோறும் குழு அமைத்து, பணம் திரட்டி, பள்ளிகளில் நடுப்பகல் உணவைக் கொடுத்தார்கள். பள்ளிக்கூட பகல் உணவுத் திட்டம் படிப்புக்குத் துணை நின்றதோடு, எல்லாச்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/202
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை