192 புரட்சியாளர் பெரியார் வழக்கம்போல, பெரியார், சில மணித் துளிகள் முன்னதாகவே வந்துவிட்டார். நகரமன்றத் தலைவரின் அறைக்குச் சென்றார். குறித்த நேரத்திற்கு மூன்று மணித் துளிகள் இருக்கும்போது, பெரியார் எழுந்து விழா மண்டபத்தை நோக்கி நடந்தார். மேடை யில் அமர்ந்ததும், அங்கிருந்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்துவிட்டு, தடியூன்றி எழுந்து நின்றார். கடவுள் வாழ்த்து என்று இவரே அறிவித்துவிட்டார். கடவுள் வாழ்த்து முடியும் மட்டும் பெரியார் நின்றுகொண்டிருந் தார். தமது பேச்சில் கடவுள் பக்கமே வரவில்லை. காமராசரின் கல்விச் சாதனைகளைப்பற்றி பிரமாதமாகப் பேசினார். எல்லோர்க்கும் சொல்லமுடியாத மகிழ்ச்சி என்று அறிவித்தார்கள். கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம் மேற்கூறியவற்றைக் கேட்டு விட்டு, 'பெரியாரால் தாக்கப்படாத புனிதமான கருத்துக்கள் எதுவும் இல்லை. எவ்வளவு பெரிய மனிதராயினும் ஒவ்வொரு இந்தியத் தலைவரும் அவரால் ஒரு முறையாவது தாக்கப்பட்டிருப் பார். எதிர்ப்புக் கடலுக்கிடையில், அவர் குலைக்கமுடியாத செல்வாக்கோடு பொது வாழ்வில் இருப்பதற்குக் காரணமே நீங்கள் சில நாட்களுக்குமுன் கண்ட அவருடைய தன்னடக்கமும் பண்பாடும் கட்டுப்பாடும் ஆகும்' என்று சொன்னார். அடுத்து, 1966ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ஈரோடு சிக்கைய்யா கல்லூரி நாள். சிறப்புரையாற்ற நான் இசைந்தேன். அதைக் கேள்விப்பட்ட பெரியார்-கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர், அதுவரை கல்லூரிக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதவர்-தானே விழாவிற்குத் தலைமை தாங்குவதாக எழுதிவிட்டார். அப்படியே வந்து தலைமை ஏற்றார். அவ்விழாவிலும் முதல் நிகழ்ச்சி, கடவுள் வாழ்த்து' என்று குறிக்கப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் விழாவைத் தொடங்கிய பெரியார், எழுந்து நின்று, கடவுள் வாழ்த்து' என்று அறிவித்தார். கடவுள் வாழ்த்து பாடி னார்கள். பெரியார் பொறுமையாக இருந்தார்; பின்னர் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கல்விபற்றியே பேசினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தை பெரியாரை, திருச்சியில் பெரியார் மாளிகையில் நான் காண நேர்ந்தது. அவர் கொடுத்த சிற்றுண்டியை உண்டபடியே, அய்யாவோடு பேசிக்கொண்டிருந் தேன். கூட்டுப் பாட்டு காதில் வீழ்ந்தது. பாட்டு முடியும் மட்டும் பொறுத்திருந்தேன். முடிந்ததும் நான் 'அய்யா, நம் அனாதை இல்லப் பிள்ளைகள், "கடவுள் வாழ்த்து" என்று “நீராடும் கடலுடுத்த" என்னும் பாட்டைப் பாடுகிறார்களே!' என்று வியப்போடு கேட்டேன்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/204
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை