பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியாரின் தனித்தன்மை 193 அதற்குப் பெரியார், 'ஆதரிக்க ஆள் இல்லாத குழந்தைகள் இவை. சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக, நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கலாமா? வயது வந்தால், அவர்களாகப் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையின் விளை வாக நாத்திகர்கள் ஆனால் அது சரி!' என்று அமைதியாகக் கூறினார். கடவுள் வாழ்த்து காதில் வீழ்வதால், தன்னுடைய நாத்திகக் கற்புக்குப் பழுது ஏற்பட்டுவிட்டதாகக் கருதவில்லை, பெரியார். என்னே அவரது பெருந்தன்மை; தாராள மனப்பான்மை; பொறுமை. மாற்றாரை மதித்தல் நாணயமாகப் பொதுத் தொண்டு ஆற்றுபவர்கள், கருத்தில் தனக்கு எதிர்கோணத்திலிருந்தாலும் அவர்களிடம் பெரியார் நட்பும் பாசமும் கொண்டிருந்தார். மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார் மறைவதற்கு முந்திய நாள் மாலை, நான், தந்தை பெரியாரை சென்னையில் பெரியார் திடலில் கண்டேன். சோகமே உருவாகக் காணப்பட்டார் பெரியார். நான் அவரிடம், 'அய்யா! உடம்புக்கு என்ன? இவ்வளவு சோக மாக, தாங்கள் எப்போதும் இருந்ததில்லையே!' என்று கேட்டேன். பெரியார் நேராகப் பதில் சொல்லவில்லை. என்னைப் பார்த்து, 'பத்திரிகை விற்பனை அதிகமாகட்டும் என்று அப்படிப் போடு கிறார்களா? அல்லது உண்மையிலே, ஆச்சாரியாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறதா?' என்று ஏக்கத்தோடு கேட்டார். நான் 'செய்தி பொய்யல்ல அய்யா! இராஜாஜி மெய்யாகவே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்' என்றேன். அதற்கு அவர், 'ஏனுங்க அப்படி! ஆச்சாரியாரை உலகத்தில் எங்கே தெரியாது? எங்கிருந்து வேணுமானாலும் மருந்தும் மருத்துவரும் பறந்து வரக்கூடுமே. அப்படிக் கொண்டுவந்து காப்பாற்றக்கூடாதா?' என்று கவலைத் தோயக் கேட்டார். முடிந்ததெல்லாம் செய்து பார்க்கிறார்கள், இருந்தாலும் என்று நான் இழுத்தேன். 'என்னங்க அநியாயம்! அவர் என்னைப்போல கண்டதை உண்ணமாட்டார். எல்லாம் அளவோடு இருக்கும். நேராநேரத் தில் உண்பார்; உறங்குவார். அவ்வளவு ஒழுங்கா இருக்கிறவ ராயிற்றே! இன்னும் நான்கைந்து ஆண்டு இருக்கலாமே!' என்று பெரியார் ஆற்றாமைப்பட்டார். 13