பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 புரட்சியாளர் பெரியார் செலுத்தும் ஆச்சாரியாரோடு, பலமுறை, பொதுமக்கள் நலனுக்காகப் போராடியவர், பெரியார். அவருக்குக் கறுப்புக் கொடி காட்ட வைத்தவர் பெரியார். அவர், முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகவேண்டிய நெருக்கடியை உருவாக்கியவர் பெரியார். கடுமை யான கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் காழ்ப்பு கொள்ளா தவர்; பகையை வளர்க்காதவர்; பண்பாளர் பெரியார். ஆச்சாரியாருக்கு இறுதி வணக்கம் பொருட்டு சென்னை கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்குச் சென்று காத் திருந்தார். தந்தை பெரியார். தனது சக்கர வண்டியில் அமர்ந் திருந்தார். அப்போது, குடியரசுத் தலைவர், திரு. வி.வி. கிரியும், ஆளுநர் ஷாவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். மயானத்தில் நாற் காலியா போட்டு வைப்பார்கள்? குடியரசுத் தலைவர் ஒரு பக்கமாக நின்றார். இதைப் பெரியார் பார்த்துவிட்டார். நொடிப்பொழு தில், அருகிலிருந்த தோழர்கள் உதவியால், சக்கர வண்டியிலிருந்து இறங்கி, கீழே உட்கார்ந்துகொண்டு, வண்டியை திரு. அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்குத் தள்ளிக்கொண்டு போகச் செய்தார். திரு. கிரி அவர்கள் உட்கார ஏற்பாடு செய் தார், தனிப்பட்ட பற்றால் அல்ல; அவரிடம் எந்தத் தயவையும் எதிர்பார்த்தல்ல; முன் ஏதோ முன் ஏதோ உதவியைப் பெற்றதற்காக நன்றிக்கடனா? இல்லை. குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை யைக் காட்டவேண்டுமென்பதற்காக, பார்ப்பனராயிருந்ததையும் பொருட்படுத்தாது. திரு. கிரி அவர்களுக்கு தன்னுடைய இருக் கையைக் கொடுத்த பெரியார், பார்ப்பன வெறுப்பாளர் என்று யார் யாரோ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பெரியாரின் பண்பை எத்தனை பெரியவர்களிடம் காணமுடிகிறது! குழந்தைகள் கல்வி கிரி வயது ஏற ஏற, சிந்தனை தேங்கிவிடுவது இயல்பு. ஆனால் பெரியார் இதற்கு விதிவிலக்காக விளங்கினார். ஐன்ஸ்டீன், இரஸ்ஸல், பெர்னார்ட்ஷா ஆகியவர்களைப்போன்று பெரியாரும் சூழ்நிலைக்கேற்ற புதுக் கருத்துகளை அளித்துக்கொண்டிருந்தார். தமது தொண்ணூறாவது வயதில் பாலர் பள்ளிகளின் (நர்சரி, கிண்டர் கார்டன் பள்ளிகளின்) இன்றியமையாமையை உணர்ந்து வலியுறுத்தினார். அய்ந்து வயது முடிந்த பிறகே, சிறுவர் சிறுமியரைப் பள்ளியில் சேர்க்கும் பழக்கம், நம் சமுதாயத்தில் தொன்றுதொட்டு வருவ தாகும். அறிவுத் தூண்டுதல்கள் குறைந்திருந்த அக்காலத்திற்கு இது போதுமானது. வானொலி, தொலைக் காட்சி, செய்தித் தாள்கள், பருவ இதழ்கள் வந்து மோதும் இன்றைய சூழ்நிலையில்