FOR பெரியாரின் தனித்தன்மை 195 குழந்தைகளின் கல்வியை அய்ந்தாவது வரையில் தள்ளிப்போடுவது தீங்கானது; குழந்தைகளின் வளர்ச்சியைக் குறைக்கக்கூடியது. இதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் மூன்று வயது முடிந்த எல்லாக் குழந்தைகளும் சேரும் வகையில் ஒவ்வோர் தொடக்கப் பள்ளியோடும் பாலர் பகுதிகள் இணைக்கப்படவேண்டும்; செல் வந்தர் வீட்டுக் குழந்தைகள் பெறும் இவ்வாய்ப்பு ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், நாட்டுப்புற மக்கள் ஆகியோருக்கே அதிகம் தேவை; எனவே உள்ளூரில் உள்ள படித்த பெண்களைக்கொண்டு, அவர்களுக்குச் சிறு பயிற்சி கொடுத்து, எளிய செலவில் பதினாயிரக் கணக்கில் நர்சரி பள்ளிகளை நடத்தும்படி தமிழக அரசுக்கு விரிவா என ஆலோசனை கூறும் 'விடுதலை' தலையங்கத்தை பெரியார் தீட்டி, தன் கையெழுத்தோடு வெளியிட்டார். தமது தொண்ணூற்று நான்காம் வயதில் பெரியார் நாட்டின் நலத்திற்கும் பொதுமக்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் இன்றிமையாத மற்றோர் சிறந்த கருத்தினை வெளியிட்டார். அது என்ன? முதியோர் எழுத்தறிவை உடனடியாக வளர்க்கவேண்டும். என்பதாகும். முதியோர் கல்விக்கு முதலிடம் நம் சமுதாயத்தில் ஏராளமானவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதிருப்பது வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது என்று பெரியார் முழங்கினார். 'எழுத்தறிவு பெற ஆயிரக் கணக்கான சொற்கள் தேவையில்லை; பெரும் பெரும் கணக்குப் பயிற்சி வேண்டாம். அன்றாட வழக்கிலுள்ள சில நூறு சொற்களை எழுதப் படிக்கத் தெரிந்துகொண்டால் போதும். வீட்டுக் கணக்குப் போடத் தெரிந்துகொண்டால் இப்போதைக்குப் போதும். இவற்றை கற்றுக்கொடுக்க, மாதக் கணக்கில் காலத்தை நீடிக்கவேண்டாம். ஒரு சில மாதங்களில் செய்து முடிக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார். அம்முறையில் உடனடியாகத் தொடங்கி, விரைந்து செயல்பட்டு, ஓராண்டு காலத்தில் முதியவர் அனைவருக்கும் கண் திறந்துவிடவேண்டும் என்று பெரியார் துடித் தார். க முதியோர் எழுத்தறிவுச் சாதனைக்குத் தவணை ஆறாண்டு களாக இருப்பினும், படிப்புக் காலம் பத்து திங்களாக இருப்பினும் இப்போது இந்திய அரசு அறிவித்துள்ள தேசிய முதியோர் கல்வித் திட்டம் பெரியாரின் கருத்துக்கு வெற்றியாகும். 'எத்தனையோ திட்டங்களில் இதுவும் ஒன்று' என்று இந்திய அரசும், தமிழக அரசும் முதியோர் எழுத்தறிவு இயக்கத்தை ஒதுக்கி
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/207
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை