196 புரட்சியாளர் பெரியார் விடாமல், போதிய ஆர்வத்தையும் ஆற்றலையும் செலுத்தி வெற்றிபெறச் செய்தல், பெரியாருக்குப் பெருமை சேர்ப்பதைப் போலவே, நாட்டுமக்களின் எதிர்காலத்தை மாற்றி, வளர்க்கும் நல்வாய்ப்பாக, பெரும் வாய்ப்பாக, விளங்குமென்பது உறுதி. மதிப்பிடுவதில் கைதேர்ந்தவர் பெரியார் மனிதர்களையும் சூழல்களையும் துல்லியமாக மதிப்பிடு வதில் கைதேர்ந்து விளங்கினார். இயற்கை மதிநுட்பத்தோடு ஆழ்ந்த அனுபவம் பெற்ற பெரியாரின் மதிப்பீடு எவ்வளவு துல்லிய மானது என்று பார்ப்போம். இரண்டாவது உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். சென்னை மாகாணத்தில், நேசக் கட்சியின் வெற்றிக்கு ஆதரவு திரட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் தந்தை பெரியார் உறுப்பினராக இருந்தார். அவ்வமயம், சீனாவின் அதிபர் சாங்கேஷேக், இந்தியாவிற்கு வந்தார். சென்னை நகரத்திற்கும் வந்தார். அதையொட்டி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சாங்கேஷேக் உரையாற்றினார். பெரியாரும் பேசினார். கூட்டம் முடிந்தபின், பெரியார் தம் இல்லத்தில் கட்சித் தோழர்களோடு பேசிக்கொண்டிருந்தார். நானும் உடன் இருந் தேன். பெரியார் உரையாடலின்போது, 'இந்த சாங்கேஷேக்கிற்கு சீன மக்களிடம் செல்வாக்கு இல்லை. அமெரிக்கர்கள் இவரை உயர்த்தி நிறுத்தி ஆட்டிவைக்கிறார்கள். சீன மக்களின் தலைவ ராக இவர் நெடுங்காலம் இருக்கமுடியாது' என்று கூறினார். நொடிப்பொழுது தோழர்களுக்கு அதிர்ச்சி. அடுத்த நொடி, ஒன்று புலனாயிற்று. அது என்ன? பொதுக்கூட்டத்தில் ஆங்கிலே யருக்கு ஆதரவு கொடுக்கவேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி பேசிய பெரியார், சாங்கேஷேக்கைப்பற்றி, மக்கள் எதிர் பார்த்த அளவு, புகழாததற்குக் காரணம் விளங்கிவிட்டது. காந்தியாரின் உண்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கிய பெரியார், பின்னர் அவரோடு கருத்து வேற்றுமைகொண்டார். அவ்வேற்றுமை, எதில் முளைத்தது? காந்தியார், சாதியொழிப் பின்மேல் நாட்டம் செலுத்தவில்லை. சாதி வேற்றுமைகளுக்கு ஆணிவேராகிய பார்ப்பனீயத்தைத் தாக்க வரவில்லை. மாறாக, வருணாசிரம தர்மத்திற்கு புது விளக்கம் சொல்லி, அதை உயிர்ப் பிக்க முனைந்தார். இவை நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தீங்கானவை என்பது பெரியார் முடிவு. எனவே காந்தியத்தின் எதிரியாகிவிட்டார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/208
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை