பெரியாரின் தனித்தன்மை 197 ஒரு சமயம் பெரியார், காந்தியாரைப்பற்றி எழுதும்போது, 'என்றைக்கு காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்பிற்கும் சாதி சமத்து வத்திற்கும் பாடுபட முனைகிறாரோ, அன்று முதல் பார்ப்பனர்கள் காந்தியாரின் மகாத்மாத் தன்மையை அழித்துவிடுவார்கள்' என்று எழுதினார். இதைப் படித்துவிட்டுப் பதறிய பல நல்லவர்களை நான் அறிவேன். ஆனால், பிற்காலத்தில் நடந்தது என்ன? காந்தியாரின் தொண்டு சமுதாய மாற்றத்தின்பால் சாய்வதைக் கண்டதும், மகாத்மா தன்மையை அல்ல, 'மகாத்மா'வையே ஒழித்துக்கட்டிவிட்டார்களா? இல்லையா? மற்றோர் கணிப்பு. 1963ஆம் ஆண்டு, முதல் அமைச்சர் காமராசர், தமது பதவியைத் துறந்துவிட்டு, அனைத்திந்திய காங்கிரசின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதாகச் செய்தி வெளியாயிற்று. உடனே பெரியார், தந்தி அடித்தார். காமராசருக்குத் 'நீங்களாகவோ அல்லது மற்றவர்களின் ஆலோசனைப்படியோ முடிவு செய்திருந்தாலும் முதல் அமைச்சர் பதவியை விடுவது, தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் தற்கொலை யாக முடியும்' என்பது பெரியாரின் தந்தி. பெரியாரின் கணிப்பு நூற்றுக்கு நூறு சரியென்பதை பிந்திய வரலாறு மெய்ப்பித்துவிட்டது. விஞ்ஞானப் போக்கின் மதிப்பீடு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, மக்களினம் நினைத்துப் பார்க்க முடியாதவை இப்போது நிகழ்ச்சிகளாகவே இருப்பதைக் காண் கிறோம். விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞான ஆய்வுப்பெருக்கமும் எண்ணற்ற விந்தைகளைச் செய்துகாட்டுகின்றன. பள்ளிப் படிப்பையும் முடிக்காத பெரியார், உலகப் பட்டறிவில் சிறந்து விளங்கினார். மக்கள் போக்கையும் விஞ்ஞான போக்கை யும் கூர்ந்து கவனித்து வந்தார். அதன் விளைவு? விஞ்ஞானிகளும் துணிந்து சொல்ல முன்வராத கருத்தை பெரியார் வெளியிட்டார். 1943ஆம் ஆண்டில், திருமண நிகழ்ச்சியொன்றில், உரையாற்றும் போது அறிவியல் வளர்ச்சியின் விளைவை நினைவுப்படுத்திவிட்டு, 'மக்கள் இனப்பெருக்கிற்கு ஆண் பெண் சேர்க்கை என்பது நீக்கப் பட்டுவிட்டு, செயற்கை முறையில் ஊசிபோட்டு, வீரியத்தை பெண்கள் உடலில் விட்டு நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப் படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும் என்று கோடிட்டுக் காட்டினார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/209
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை