பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 புரட்சியாளர் பெரியார் என்றும் சுறுசுறுப்பாக இருந்தவர் பெரியார். எந்நேரமும் மக்கள் நலனைப்பற்றிய சிந்தனை அல்லது அதை எடுத்து விளக்கி உரை யாற்றல் அல்லது எழுத்தில் வடித்தல் ஆகிய பணிகளில் பெரியார் காலத்தைச் செலவிட்டார். உடலுழைப்பு வேலைக்கும் சுணங்கா தவர் பெரியார். தள்ளாமை வரும் வரையில், தன்னுடைய பெட்டி பேழைகளை அவரே தூக்கிக்கொண்டு போவார். எளிய வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய பெரியார், ஒருமுறை பின்வருமாறு எழுதினார்: 4 என்னை நான் சின்னவன் என்றும் குறைந்த செலவில் வாழ் வதற்குத் தகுதியுடையவன் என்றும் எண்ணிக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே நான் என் யோக்கியதைக்கு மீறின மிகப் பெருமையுடையவனாகவும் தாராளமாகச் செலவு செய்பவனாக வும் கருதிக்கொண்டிருக்கிறேன். . நான் மூட்டை தூக்குவதில், பாரத்தினால் கஷ்டப்பட்டிருப் பேனேயொழிய, மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.' அறிவுக்கு வேலை கொடுக்காதபோது ஏதாவது ஓர் உடல் உழைப்பில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக விளங்கியது, பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு வேராக இருந்திருக்கக்கூடும்.