206 புரட்சியாளர் பெரியார் தன்னலக் கோட்டையைக் காக்க, எத்தனையோ சாகசங்களைக் கையாண்டார்கள். திண்ணைக்குத் திண்ணை தூற்றல்கள். மேடைகளில் அவதூறுகள். ஆசிரியர் கடிதங்களின் கடிதங்களின் வழியாக தூண்டுதல்கள். ஆட்சியாளரை நெருக்கி வழக்குப் போடுதல். இத்தனைக்கிடையிலும் தெளிந்த அறிவுடையோர் முற்போக்குக் கருத்துடையோர், தந்தை பெரியாரையும் அவருடைய இயக் கத்தின் அடிப்படைச் சிறப்புகளையும் அப்போதைக்கப்போது சுட்டிக் காட்டி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கவனிப் போம். ஆக்ஸ்போர்டு அறிஞர் பாராட்டு ஈரோட்டில் பெரியாரைக் கண்டு உரையாடிய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திரு. பெசில் மாத்யூஸ் என்பவர் புறத் தோற்றத்தில் மட்டும் அல்ல, உள்ளுணர்ச்சியிலும் தோழர் ஈ.வே. ராமசாமி வில்லியம் மாரிஸ் போன்றவரே' என் பதை அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த 2, 3 மணி நேரத்திற் குள் கண்டுகொண்டேன். பொருளற்ற எந்தப் பழைய சமுதாயக் கட்டுப்பாடுகளையும் அடியோடு தகர்த்து எறியவேண்டும் என்றும், அந்த துடிதுடிப்பு, காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களையும் பழமைப்பாசி படர்ந்துவிட்ட கருத்துக்களையும் உடைத்தெறிய வேண்டும் என்னும் அந்த நெஞ்சழுத்தம், 'புதியதோர் உலகு செய்வோம்' என்னும் அந்த உறுதிப்பாடு, இவை அத்தனையிலும் தோழர் ஈ.வே.ரா. வில்லியம் மாரிஸேதான். ஆம், அவர் 20ஆம் நூற்றாண்டின் வில்லியம் மாரிஸ். மாரிசைப்போலவே ஈ.வே.ராவும் மிக எளிய வாழ்க்கையே வாழ்கின்றார்... 'சொந்த அச்சகத்தின் வாயிலாகவே, சொந்த கருத்துக்களை பொதுமக்களுக்கு உரைக்கிறது வில்லியம் வில்லியம் மாரிசுக்கும் ராம சாமிக்கும் உள்ள வியக்கத்தக்க இன்னொரு ஒற்றுமை என்பதை யும் கண்டேன். தோழர் ஈ.வே. ரா. நடத்துகின்ற ஆங்கில வார இதழ் இருக் கிறதே, அதன் பெயராகிய புரட்சி (Revolt) என்பதை அவருடைய வாழ்க்கை வரலாற்றிற்கே பெயராய் சூட்டிவிடலாம். அது மிகப் பொருத்தமாகவும் இருக்கும்' என்று பெரியாரின் உண்மையான உருவத்தைக் காட்டினார். பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராக விளங்கிய, பனகல் அரசர், சர். பி. ராமராய நிங்கவாரு, 1928இல் ஈ.வே.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/218
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை