பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் பணிகளின் விளைவு 207 ராமசாமியைப்பற்றி 'மதிப்பு வாய்ந்த எனது நண்பர் தோழர் ஈ.வே.ராமசாமி தற்காலத்தில் பெரிய சமூக சீர்திருத்தக்காரர் ஆவார். அவர் சமூக சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருது கிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில் அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையை தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூக சீர்திருத்தக் கொள்கை முன்னேற இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப்போகவும் மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் தயாராயிருக்கிறார். 'சமூக சீர்திருத்தத் துறையில் பலர் அநேக ஆண்டுகள் பாடு பட்டுப் பயன் பெறாமற்போன வேலையைச் சில ஆண்டுகளில் இவர் பயனளிக்குமாறு செய்துவிட்டார்' என்று உரைத்தார். சர். பிற்காலத்தில், சென்னை மாகாணத்தில் ஆளுநரான கே.வி. ரெட்டி நாயுடு 1928இல் பெரியாரை எப்படி மதிப்பிடுகிறார் என்று பார்ப்போம். 'தனக்கு ஒன்றை உரியதாக்கிக்கொண்டு, அதையே தம் முழு வேலையாகவும் கொண்டு, பல்லாண்டுகளாக வேலை செய்கிற ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று சிறப்பான குணங்கள் அமைய வேண்டும். அவ்விதக் குணங்கள் அமைந்தவர்கள் இத் தென்னிந் தியா முழுவதும் தேடினாலும் நமது நாயக்கரைத் தவிர, வேறு யாரையும் கண்டுபிடிக்க முடியாது. அத்தகைய குணங்கள் எவையெனில், முதலாவது தைரியம்; இரண்டாவது தியாகம்; மூன்றாவது தம்முடைய வேலையை எவ்வாறு நடத்தி அனுபவத் திற்கு கொண்டுவருவது என்பது. "தோழர் ராமசாமி உண்மையான சிங்கம்! சிங்கத்தின் இருதயத்தை பெற்றிருக்கிறார். வாழ்க்கையில் அச்சமென்பது அவருக்கு இன்னதென்றே தெரியாது. அத்தகைய அச்சமின்மை இருந்தாலொழிய இத்தகைய காரியங்களில் யாரும் வேலை செய்யமுடியாது. 'அவர் எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறவர். 'பழைய காலத்து வீரர்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தி யதுபோல, தோழர் ராமசாமி தமது பேனாவை அச்சமின்றி எங்கும் செலுத்துகிறார்.' தன்மான இயக்கத்தின் பகுத்தறிவு ஒளி தமிழ்நாட்டோடு நிற்க வில்லை. அது பிற மாநிலங்களிலும் தொடக்க காலத்திலேயே பரவிற்று. 'இந்த இயக்கமானது மக்களின் பேதத்தையும் அறியாமையையும் உயர்வு தாழ்வையும் ஒழிப்பதற்கு ஏற்பட்ட