208 புரட்சியாளர் பெரியார் தாகும். இவைகள் ஒழிந்தால் தானாகவே சுயமரியாதை உதயமாகிவிடும். இவ்வியக்கம் நாட்டில் எவ்வளவு பரவி யிருக்கிறதென்பதற்கு பம்பாய் முதலிய வெளி மாகாணங்களில் சுயமரியாதை மாநாடுகள் கூடுவதும் அவைகளில் செய்யப்படும் தீர்மானங்களும் போதிய சான்றாகும்' என்று 20-7-1929இல் திருநெல்வேலியில் நடந்த, மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், அம் மாநாட்டை திறந்துவைத்த எஸ். குமாரசாமி ரெட்டியார் விளக்கினார். பெரியாரோடு சேர்ந்து காங்கிரசு தொண்டாற்றி, கதரைப் பரப்புவதில் துணை நின்று, பின்னர், வகுப்புரிமைக்குப் போராடும் பொருட்டு, காங்கிரசை விட்டு பெரியாரோடு வெளியேறியவர், எஸ். இராமநாதன், எம்.ஏ.,பி.எல். ஆவார். அவர் தன்மான இயக்கத்தில் பல்லாண்டு, பெரியாருக்குத் துணையாக விளங் கியவர். அவர் பெரியாரைப்பற்றி கூறும்போது, 'வைக்கம் வீரர் என்பவர் ஒரு மனிதரல்லர். அவர் எனக்கு ஒரு மனிதராகத் தோன்றவில்லை. ஒரு கொள்கையாகவே தோன்றுகிறார். உலகத்தில் எந்தெந்த நாடுகள் நாடுகள் முன்னேறியிருக்கின்றனவோ அந்தந்த நாடுகளில் இவரது கொள்கை நிலைக்கக் காணலாம். மற்றும் தீவிரமாக எந்த மக்கள் உரிமைப் போராட்டம் புரிகின்றாரோ அந்த மக்கள் இந்தக் கொள்கையையே கொண்டிருப்பதையும் காணலாம்.' கலப்புத் திருமணம் பகுத்தறிவுப் பகலவன், தன்மான இயக்கத் தந்தை, பெரியார் ஈ. வே. ராமசாமி அரை நூற்றாண்டுக்கு மேலாக அயராது பாடு பட்டதன் விளைவாகக் கலப்புத் திருமணங்கள் சர்வ சாதாரண மாகிவிட்டன. இயக்கத்தின் ஆதரவிலும் இயக்கத்திற்கு அப்பா லும் எண்ணற்ற கலப்புத் திருமணங்கள் ஆண்டுதோறும் நடை பெறுகின்றன. எல்லாச் சாதிகளிலும் எல்லாப் பெரிய குடும்பங் களிலும் பிற சாதிக் கலப்பு மணம் நடைமுறை வாழ்க்கையாகி விட்டதைக் காண்கிறோம். சாதிக்குள்ளேயே திருமணம் என்பதை அநேகமாக, சமுதாய ஏணியின் கீழ் படிக்கட்டுகளிலும், பொருளிய லில் அடிமட்டத்திலும் இருப்போர் மட்டுமே பின்பற்றி வருகிறார் கள். புரோகிதமற்ற திருமணங்கள், அய்ம்பதாண்டு காலத்தில், இலட்சக்கணக்கில் நடந்துள்ளன. 'இராகு கால' திருமணங்களும் எண்ணற்றன. 1967ஆம் ஆண்டு சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டத்தை முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா நிறை
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/220
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை