பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் பணிகளின் விளைவு 209 வேற்றி வைத்தது, தன்மான இயக்கத்திற்குப் பெரும் வெற்றி யாகும். புரோகிதர்களை, சடங்குகளை, நீக்கிவிட்டுத் திருமணம் செய்துகொண்டோர், வைதீக முறையிலேயே திருமணம் செய்து கொண்டவர்களைவிட அதிக சிறப்போடு வாழ்வதைக் காணும் இளைஞர் உலகம், அடுத்த படிக்கு முன்னேறுவதாக; பதிவுத் திருமணங்களை சிக்கனமாகச் செய்துகொள்ளும் பழக்கத்திற்கு வருவதாக. கோயில் நுழைவு தீண்டாமை ஒழிப்பிற்காகப் போராடிய பெரியார், வைக்கத்தில் வெற்றி கண்டார். கல்பாத்தியில், சுசீந்திரத்தில் அதன் பின் விளைவைக் கண்டார். தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களி லும் எல்லாச் சாதியாரும் போகலாம் என்னும் சட்டம் நடை முறையில் இருப்பதை, பெரியார் தம் வாழ்நாளிலேயே கண்டார். சமுதாயத்தின் கீழ் படிக்கட்டுகளில் உள்ள பல சாதியார் சமைப் பதை மற்ற சாதியார் ஒன்றாய் இருந்து உண்பதை நடைமுறை யாக்கிவிட்டார். சாதி ஏற்றத்தாழ்வைக் காட்டும் அடையாளமாக, ஓட்டல்களில், 'பிராமணாள்' என்னும் அறிவிப்பு அநேகமாகப் பறந்து போய்விட்டது. பொதுக் குளங்கள், கிணறுகள், வீதிகள் ஆகியவற்றை எல்லோரும் பயன்படுத்தும் நிலை உருவாகி, பல ஆண்டுகள் ஆயின. சிற்சில சிற்றூர்களில், விட்ட குறை தொட்ட குறையாக, சாதி வேற்றுமை பாராட்டப்படுகிறது. அவ்விடங்களி லும் எல்லா வகையிலும் வேற்றுமை அடியோடு தொலைவதற் காகப் பாடுபடவேண்டியது நம் கடமையாகும். இன்றைய நடைமுறைப்படி பார்ப்பனர்கள் மட்டுமே தமிழ் நாட்டுக் கோயில்களில் கருவறைக்குள் செல்லலாம். இம்முறை பார்ப்பன அல்லாதாரை இழிவுபடுத்து தலாகும். எனவே கோயில் கருவறைக்குள் எல்லோரும் நுழைவதற்காகக் கிளர்ச்சி செய்ய பெரியார் திட்டமிட்டிருந்தார். அதை நடத்தி வெற்றி பெறுவதற் குள் மறைந்துவிட்டார். பின் தலைமுறைக்கு அத்தொண்டை விட்டு விட்டு போயிருக்கிறார். யாவர்க்கும் 'அர்ச்சகர்' தொழில் உரிமை இன்ன சாதி வேற்றுமையின் அடிப்படையில் சிலர்தான் தொழிலைச் செய்யலாம் என்றும், மற்றவர்கள் செய்யக்கூடாது என்றும் இருக்கும் முறை அவர்களை இழிவுபடுத்துவதாகும். இந்த இழிவும் நீங்க வேண்டுமென்பதற்காக, எல்லோரும் அர்ச்சகராக லாம் என்று பெரியார் போராடியதும், அதற்கு வழி செய்யும் 14