பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புரட்சியாளர் பெரியார் சட்டத்தை தமிழக அரசும், சட்டமன்றமும் ஒருமனதாக 12-1-71ல் நிறைவேற்றியதும் உரிமை விவகாரம். அதற்குத் தடையாக அரசியல் சட்டம் என்னும் 'நந்தி' படுத்திருப்பதாக உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு கூறியுள்ளது. சட்டம். மனி தர்களை வாழவிட வேண்டும்; சரிநிகர் சமானமாக வாழவிடவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கப்படவேண்டும். தீண்டாமை குற்றம் என்று அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. இது பெரியாரின் கொள்கைக்கு வெற்றியாகும். வழக்காடத் துணிவிருந்தால் எவ்வகையில் எவ்வுருவில் தீண்டாமை யைக் காட்டினாலும் அவர் தண்டிக்கப்படுவார். அண்மையில் தமிழ்நாட்டில் ஓர் ஊரில், ஆதி திராவிடர் ஒருவருக்கு கொட்டாங் குச்சியில் தேனீர் ஊற்றியதற்காக, ஓட்டல்காரர் தண்டிக்கப் பட்டார். தாழ்த்தப்பட்டவர் வாழ்வில் மறுவாழ்வு கீழ்வெண்மணி, விழுப்புரம், அரக்கோணம், கூடலூர் ஆகிய ஊர்கள் ஆதி திராவிடர்களுக்கு இழைத்த கொடுமையின் வேதனையின் நினைவாலயங்களாகக் காட்சியளித்தாலும் இன்று ஆதி திராவிடர்களைக் கட்டிவைத்து, அடித்து, சாணிப்பால் ஊற்றமுடியாது. பேருந்துகளில், இரயில் வண்டிகளில், எட்டி உட்காரு என்று எவரையும் நாட்டுப்புறங்களில்கூடச் சொல்ல முடியாது. சிற்றூர்களிலும் உள்ளூர்களிலேயே ஆதி திராவிட ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மேட்டுக் குடி மாணவர்கள் அவர்களைக் கண்டால், எழுந்து நின்று, 'வணக்கம் அய்யா' என்று கும்பிடும் நிலை பெருபாலான ஊர்களில் உருவாகிவிட்டது. நீதிமன்றங்களில் உயர் நீதிமன்றம் உள்பட ஆதி திராவிட நீதிபதி கள் இடம் பெற்றுள்ளனர்; பெரியாரின் தொண்டு அந்த அளவுக்கு வெற்றி கண்டுள்ளது. அந்த நீதிபதிகளை உயர் சாதி இந்துக்கள் பார்ப்பனர்கள் உள்பட 'மை லார்ட்' ('My Lord') என்று அழைப் பதைப் பார்க்கின்றோம். எத்தனையோ ஊர்களில், ஊராட்சித் தலைவர்களாக ஆதி திராவிடர்கள் இருக்கிறார்கள். ஊராட்சி மன்றம் முதல் நாடாளு மன்றம்வரை ஆதி திராவிடர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது. சாதிப் பெயர் மறைவு சாதிக் குறிகளைப் போட்டுக்கொள்ளக்கூடாதென்று முதல் சுய மரியாதை மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டது. தொடக்கத்