212 புரட்சியாளர் பெரியார் பொங்கும் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் முயலாது, 'மிக நன்றாயிருக்கிறேன். ஒரு குறையும் இல்லை. மகாத்மா காந்தி புண்ணியத்தில், நாட்டுக்கிருந்த நாட்டுக்கிருந்த இழிவு போயிற்று. பெரியார், எங்கள் கோவை செங்குந்தர் (இசை வேளாளர்) சாதிக்கு இருந்த இழிவைப் போக்கிவிட்டார். அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. அதுபற்றித்தான் உங்களிடம் எனக்குப் பற்று. இரண்டு இழிவுகளும் துடைக்கப்பட்டுவிட்டதை எண்ணி மகிழ்ச்சி யோடு வாழ்கிறேன்' என்றார். இருவர் கண்களிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிகள் கரை கட்டின. கோவை சி.பி.சுப்பய்யா இப்படிப் பாராட்டியபோது, நான் பெரியார் கொள்கையாளனாக வாழ்வதைப்பற்றி பரவச மானேன். அரசியல் சூழலில் மாற்றம் பெரியாரின் வாழ்நாள் போராட்டம் சமுதாய மாற்றத்தோடு நிற்கவில்லை; அரசியல் சூழ்நிலையையே மாற்றிவிட்டது. ஏழைப் பங்காளர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழ்நாட்டில் முதல் அமைச்சர்களாக விளங்கிய சமுதாய நிலையை உருவாக்கியது, பெரியாரின் சமுதாயப் புரட்சி வெற்றிபெற்றதற்கு அடையாளம். திராவிட பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும் அதை மதிக்கிறவர்களும் தான் தமிழ்நாட்டை ஆளமுடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது. இது பெரியார் அளித்த கொடையாகும். . 1925இல் வகுப்புரிமைத் தீர்மானத்தை காஞ்சி மாகாண மகா நாட்டில் வாதிப்பதற்கும் விடவில்லை. ஆனால் அதே காங்கிரசின் சார்பில் திரு. காமராசர் அமைச்சரவை அவ்வகுப்புரிமையைக் கருத்திற்கொண்டு செயல்பட்டது. எல்லா பகுதியினருக்கும் கல்வி நிலையங்களில், அரசு பதவிகளில், உரிய பங்கு கிடைக்கும்படி பார்த்துக்கொண்டது. ஆகவே, வகுப்புரிமைபற்றிய கொள்கை யில் பெரியார் வென்றார். இலவசக் கல்வி கனவிலும் நனவிலும் பார்ப்பனரல்லாதார் அனைவரும் மற்ற வர்களுக்குச் சமமாகக் கல்வி அறிவு பெறவேண்டுமென்று பெரியார் நினைத்து வந்தார். அக்கொள்கையும் வெற்றி பெற்றதைக் கண்டோம். நம் மக்கள் உள்ளங்களையும் சமுதாயச் சூழ்நிலையை யும் 'எல்லார்க்கும் கல்வி' என்னும் கொள்கைக்கேற்பப் பண்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/224
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை