214 புரட்சியாளர் பெரியார் பட்டவர்களும் பின்தங்கியவர்களும் சேர்ந்து மொத்தத்தில் நூற்றுக்கு எழுபது இடங்கள்போல் பிடிக்க முடிந்தது. பார்ப்பனர் களுக்குப் பத்துப்பதினைந்து விழுக்காடு கிடைத்திருக்கலாம். இந்த சம வாய்ப்புப் பெருக்கு பெரியாரின் இயக்கத்தின் பெரும் பயனா கும். ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் படிக்கவேண்டும் என்பது பெரியாரின் சூடுதணியாத கொள்கை. இன்னும் அந்நிலை கைகூடாவிட்டாலும் அதை நோக்கி தமிழ்நாடு விரைகிறது. 1978ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்காக 1055 பேர்களை பொறுக்கியெடுத்தார்கள். அந்தப் பட்டியலில் 196 பெண்கள் இருந்தார்கள். இன்னும் அய்ந்தாண்டுகளில் பெண்கள் எண்ணிக்கை உயர்ந்து மாணவர்களும் மாணவியர்களும் சமமாகி விடுவார்களென்று எதிர்பார்க்கலாம். பெண்களை ஆசிரியர் தொழிலுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் மட்டும் எடுப்பது போதாது. காவல்துறையிலும் இராணுவத்தி லும் சேர்க்கவேண்டுமென்று 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாட்டில் முடிவு செய்தார்கள். அண்மையில் சில ஆண்டுகளாக காவல்துறையில் பெண்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளார்கள். கல்விமுறை, மாணாக்கரின் சிந்தனையைத் தூண்டுவதாக அமையவேண்டும் என்னும் திட்டம் இன்றும் இலட்சியமாகவே இருக்கிறது. இலக்கியப் பகுதி என்னும் பேரால், நாம் தலைமுறை தோறும் மூடநம்பிக்கைப் பகுதிகளை நுழைத்துக்கொண்டும் சொல்லிக் கொடுத்துக்கொண்டும் வருகிறோம். இம் முறையை மாற்றுவது வருங்காலத் தலைமுறையின் பொறுப்பாகும். இந்தி எதிர்ப்புக் கொள்கையில் பெரியார் இன்றுவரை வெற்றி பெற்று வந்துள்ளார். பள்ளிகளில் இந்திப் பாடம் எடுக்கப்பட்டு விட்டது. நாளை என்ன ஆகும்? சமூகவியல், பொருளியல் முறைகளை புதிய கண்ணோட்டத் தோடு கண்டு, அவற்றை அடியோடு மாற்றி அமைக்க அரும்பாடு பட்ட பெரியார், மொழிபற்றியும் புதிய, புரட்சிகரமான கண் ணோட்டம் உடையவராக விளங்கினார். தமிழ்மொழியைப்பற்றிய ஆய்வு கடவுள், சமயம் ஆகியவற்றிற்கு புனிதத்தன்மை கற்பித்து வந்ததை வன்மையாகத் தாக்கிய பெரியார், நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு மரபுவழி கூறப்படும் புனிதத்தன்மையை எள்ளி நகையாடினார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/226
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை