பெரியார் பணிகளின் விளைவு 215 அதே சமயம் தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துக்காட்டத் தவறியதில்லை. அவரது கூற்றுப்படி தமிழ், நம் நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம்மொழியையும்விடத் தமிழ் நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுவதால்-மற்றவேற்று மொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக் கேற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியை புகுத்திக் கொள்வதன்மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு அம்மொழி யமைப்பிலுள்ள நம் நலனுக்கு புறம்பான கருத்துக்கள், கேடு பயக்கும் கருத்துக்கள், நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன. தென்னாட்டு மொழிகளை ஒப்பிட்டுக் கூறும்போது, அவர் 'என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழி லிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாக பேசப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். தமிழ்மொழி வளர்ச்சிக்காக அதில் செய்யப்படவேண்டிய சில சீர்திருத்தங்களைப்பற்றி நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தினார். 'தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்ற படி செம்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் கற்க மேலும் இலகு வாக்கப்படவேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப்பட வேண்டும். ஆகவே, பிறர் சுலபமாகத் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ளவும், சுலபமாக அச்சுக்கோக்கவும், தட்டச்சு அடிக்கவும், தமிழ் எழுத்துக் களை மாற்றவேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு அடிப்படைக் காரணத்தையும் தெளிவுபடுத்தினார். 'மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க் கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்துக் கைக்கொள்ளவேண்டும்.' எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி துல்லியமான கருத்துக் கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தி யிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/227
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை