216 புரட்சியாளர் பெரியார் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துக்கள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துக்கள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துக்களில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துக் களைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துக்களே ஒழிய தனி எழுத்துக்கள் அல்ல. இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துக்கள் - அதாவது உயிரெழுத்து ஐ, ஒள ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத் துக்கள் 2x18 = 36ம் ஆக 38 ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாத எழுத்துக்கள் ஆகிவிடும்.ஐ = அய், ஒள = அவ் என எழுதலாம். - இவை தவிர, உயிர்மெய் எழுத்துக்களில் தனி மாற்றம் பெற்றி ருக்கிற ணா,றானா ஆகிய மூன்றெழுத்துக்களும் தனி உருவம் தேவை யில்லாமல் ணா, றா, னா என்று ஆக்கிவிடலாம். மற்றும் மெய்யெழுத்துக்களில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துக்கள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துக்களை நீக்கிவிட்டு தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9.ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துக்களாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துக்களில் ந, ங, ஞ ஆகிய மூன்றை யும் எடுத்துவிடலாம். ன் +த =ந. ன்+க = ங, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப்பகுதி 8, ஆய் தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துக்களிலேயேகூட தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துக்கள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகளுக்கு மூன்று மா தங்களில் படிக்கத் துவக்கலாம் என்பது தான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின்முன் எழுத்துச் சீர்திருத்தம்பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார்.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/228
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை