பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் பணிகளின் விளைவு 217 1933ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம்பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே. எம். பாலசுப்ரமணியம், திரு.சேலம் ஆர்.நடேசன், திரு.சு.குருசாமி, திரு. பூவாளூர் அ. பொன்னம் பலனார், திரு. சாத்தான்குளம் அ. இராகவன் ஆகிய அய்வரும் கையெழுத்திட்டு அனுப்பிவைத்தார்கள். மாநாட்டில் அத் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்க மாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழு வொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1-1-'35 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றை பலவற்றை புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். அவையாவன: ணா,னா, றா என்னும் எழுத்துக்களை ணா, னா, றா எனவும், ணை,னை,லை,ளை என்பவற்றை ணை, னை, லைளை எனவும், ணொ,னொ, றெ என்பவற்றை ணொ, னொ, றொ எனவும் மாற்றி எழுதுதல் ஆகும். பெரியாரின் 'குடி அரசு', 'புரட்சி', 'பகுத்தறிவு', 'விடுதலை' இதழ்கள் இம்முறையைப் பின்பற்றின. 'குடி அரசு' வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு. டி.எஸ். அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு. வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற் றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்து பரிந்துரைத்தது. அரசு அப்பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண் டோடின. இதற்கிடையே தமிழக புலவர் குழு, பெரியார் எழுத்து சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவுசெய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு. எம். ஜி. இராமசந்திரன் தலைமையில் ஆன அ.இ.அ.தி.மு.க. அரசு முடிவுசெய்து தமிழர்கள் பாராட்டுதலைப் பெற்றது. விழாக் களைத் திட்டமிட ஒர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ் .