218 புரட்சியாளர் பெரியார் செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரி யாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின் பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந் துரையை தமிழக அரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணைப் பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் 'ஐ' என்பதை 'அய்' என்றும், 'ஔ' என்பதை 'அவ்' என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றி சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. 'ஐ', 'ஒள' என்பவை ஒரொலி எழுத்துக்கள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றை பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டு மென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கற்பட்டு சுயமரி யாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித் தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகி விட்டது. நடைமுறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணஞ் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண் களுக்கு சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழைய காலம்போல், மூன்று நாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/230
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை