220 புரட்சியாளர் பெரியார் 'ஏட்டிக்குப் போட்டி' மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மன நோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய், அளவுக்குமீறி செறிந் துள்ளது. எனவே, பலவேளை, தங்கக் கூரை, வெள்ளித் தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால். திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறை பாடு. தான் வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக சமு தாயத்திற்குத் தவறான வழிகாட்டும் 'பெரியவர்களின்' கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதை தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்ம திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் தீவிரமாகப் பரப்பிவந்தார். இரயில்வேக்கள் நாட்டுடமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்கு வரத்து இனியே நாட்டுடமை ஆகவேண்டும். விமான போக்கு வரத்து நாட்டுடமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக் கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத் தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் 'விடுதலை வரலாறு' என்ற நூலில் பெரியாரைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அது இதோ: 4 கல்லூரி காணாத கிழவர்! காளைப் பருவம் முதல் கட்டுக் கடங்காத முரடர்! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/232
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை