பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் பணிகளின் விளைவு 221 யார் அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே! ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்! யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்! அவர், யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர்! தமிழ் ஆங்கில தினசரி களின் ஆதரவு இல்லாதவர்! ஆரிய மதம், கடவுள் எனும் மூட மந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர்...' மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா. அவருடைய சாதனைகளைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடு கின்றார்: பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டி னுடைய விழிப்பினுக்கு அய்ம்பது ஆண்டும் அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு, அய்ம்பது ஆண்டுகள் என்ற அளவில், ஒரு பகுத் தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்பதற்காக, ஒரு வால்டேர், ரூசோ, இப்படித் தொடர்ச்சியாக பல பேர் வந்து வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுத்தான், பகுத்தறிவுப் பாதை யில் அந்த நாடுகள் செல்ல முடிந்தது. 'நூற்றாண்டுகளைக் குளிகைக்குள் அடக்குதல்' இது ஆங்கில வழக்கு ஆகும். சில மருந்துகளை உள்ளடக்கி சில மாத்திரைகளில் தருவதுபோல, பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து தம்முடைய வாழ்நாளிலேயே சாதித்துத் தீரவேண்டு மென்று அறிவோடும் உணர்ச்சியோடும் நெஞ்சு ஊக்கத்தோடும் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதைக்கூட இரண்டாந்தரமாக வைத்துக்கொண்டு, எந்த அளவு முன்னேறு கிறோம் என்பதைக் காண்பதிலேயே வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நின்றார் பெரியார்.' யார் வாழ்நாள் முழுவதும் புரட்சிகரமான போராட்டங்களில் ஈடு பட்டிருந்த பெரியாரும் மனச் சோர்வுகொள்ளும் வேளை இருந்தது. முதலமைச்சர் அண்ணா. கொடும் நோய்க்கு ஆளாகி, மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்ல நேர்ந்தது, பெரியாரை பெரிதும் உலுக்கிற்று. அப்போது ஏற்பட்ட மனச் சோர்வை, தன் பிறந்த நாள் மலர்க் கட்டுரையில், 'நான் துறவியாகி