பெரியார் பணிகளின் விளைவு 223 தற்கொலைப் பட்டாளம். அரை நூற்றாண்டு காலம், சாதி வெறி, அதைத் தாங்கிக்கொண்டு வரும் சமயப் பற்று, மூட நம்பிக்கைகள் ஆகியவை சேர்ந்த காட்டு வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு வரும் பெரும்படை. தன்னேரிலாத புரட்சிப் படையை நாற்பத்து எட்டு ஆண்டுகள் முழுக் கட்டுப்பாட்டில் நடத்தி வந்த படைத் தலைவர் தந்தை பெரியார் ஆவார். பெரியார் அரை நூற்றாண்டு காலம் நடத்திய எண்ணற்ற கிளர்ச்சிகளில், மறியல்களில், போராட்டங்களில், எந்த ஒன்றிலும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததில்லை; தனியார் பொரு ளுக்கு நட்டம் ஏற்படுத்தியதில்லை. ஒருமுறை 'கத்தி வைத்துக்கொள்ளுங்கள். நாள் குறிப்பேன்; அப்போது என்ன செய்வதென்று சொல்லுவேன்' என்றும், மற்றோர் முறை தீப்பந்தமும் பெட்ரோலும் ஆயத்தஞ் செய்து கொள்ளுங்கள். நான் நாள் குறித்து, என்ன செய்வதென்று ஆணையிடப்போகிறேன்' என்றும் கட்டளையிட்டார். அப் போதும் வன்முறைக்கு இடங்கொடுக்கவில்லை; முன்னரும் இடம் விடவில்லை; பின்னரும் வழிவிடவில்லை, இவ்வளவு புரட்சிகளைப் பொழிந்துகொண்டிருந்த ஒரு தலைவர், இத்தனை நீண்ட காலம் எவருக்கும் எதற்கும் தீங்கு விளையாதபடி தன்னியக்கத்தவர் களைக் கட்டிக் காத்ததில், பெரியாருக்கு இணை எவருமிலர். தந்தை ஈ. வே. ராமசாமி வயதில் அறிவில் பெரியார்; சிந்தனை யில் பெரியார்; தொண்டில் பெரியார்; சிறைக்கூடத்தை தவக்கூட மாக இருபத்தோறு முறை கொண்ட பெரியார், சாதனையில் பெரியார். குறிக்கோளை நோக்கி பீடுநடை . . தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி வங்கத்தில் தொண்டாற்றி யிருந்தால், இந்நூற்றாண்டின் கார்ல்மார்க்சாக உருவாக்கி மகிழ்ந்திருப்பார்கள். பீகாரிலோ, உத்திரப்பிரதேசத்திலோ, தொண்டாற்றியிருந்தால், இந்திய லெனினாக்கி, சமதர்மத்தை இதற்குள் நிலைநாட்டி நிமிர்ந்து நிற்பார்கள். போயும் போயும் தமிழ்நாட்டுச் 'சூத்திரர்களுக்கு'ப் பாடுபட்டாரே! தந்தையை நினைப்போம். தொண்டைத் தொடருவோம். சாதி யொழிந்த, வறுமையற்ற, எல்லோரும் வாழும், நன்றாக வாழும், ஒன்றாக வாழும் இந்தியாவை உருவாக்குவோம், இனத்தோடு சமமாகக் கலந்துவிடுவோம். மக்கள்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/235
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை