பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புரட்சியாளர் பெரியார் சிந்தனையில், செயலில், மக்கள் இனத் தொண்டில், சாதனை யில், தனக்கென வாழாமையில், உலகப் பெரியாராக விளங்கிய தந்தை பெரியார் FF. Gol. ராமசாமியை உன்னுந்தோறும் பகுத்தறிவு விளங்குவதாக; சமத்துவ உணர்வு பொங்குவதாக; சமதர்ம உணர்வு கொப்பளிப்பதாக; தொண்டு உள்ளம் வளர்வ தாக; துணிவு பெருகுவதாக; பொது நல உணர்வு சுரப்பதாக; எளிமையும் வாய்மையும் ஒளிர்வதாக. எல்லோரும் வாழ, நன்றாக வாழ, ஒன்றாக வாழ உழைப்போ மாக.