பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புரட்சியாளர் பெரியார் கொந்தளிப்பு. காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை; பட்டாளத்தின் உதவிகோரி, செய்தி பறந்தது. திருவனந்த புரத்திலிருந்து நாயர் பட்டாளம் வந்தது. அமைதியை நிலை நாட்டியது; ஊர் அடங்கிற்று. ஆனால் நியாயம் கிடைத்தது. கலகம் பிறந்தால், நியாயம் கிடைக்கும் என்பது மெய்யாயிற்று. ஈழவப் பெண்கள் காட்சிப் பொருள்களாக தொலைந்தது. சேலை உரிமை நிலைத்தது. நடமாடியது, பானை சோற்றுக்கு இரு சோறு பதங்காட்டினேன். அங்கே தான் அப்படி என்று எண்ணிவிடாதீர்கள், இங்கே மட்டும் என்ன வாழ்ந்ததாம்? சாதிக் கொடுமைகள் எல்லா ஊர்களிலும் கோரத் தாண்டவம் ஆடின. எங்கள் ஊர்த் தெருக்கோடியை ஆதி திராவிடர்கள் நெருங்கக்கூடாது. ஏன்? தெருக்கோடியில் இரண்டு குருக்கள் வீடும் ஓர் அய்யர் வீடும் இருந்தன. ஆதி திராவிடர்கள் தெருவிலே நடந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்குத் தீட்டாகி விடும். அழுக்கை மிதித்துவிட்டால் கால்களைக் கழுவினால் தொலைந்து விடும். சாதித் தீட்டுபட்டுவிட்டால், தலை முழுகினால்தான் தீரும். தாழ்த்தப்பட்டோர் நிலை எல்லாக் கிராமங்களிலும் இதே கொடுமை. ஆதி திராவிடர் குடியிருப்புகள் ஊருக்கு வெளியே ஒதுங்கியிருப்பது மட்டுமா? அவற்றில் குடிநீர் வசதி கிடையாது, குளி நீராவது உண்டா? தொலைவில் உள்ள மடுவுக்குப் போகவேண்டும். ஆயிரம் ஆயிரம் ஊர்களில் வயல்களுக்கிடையே போகும் சேற்று நீரில் தான் உடம்பு கழுவவேண்டும். குளிக்க நீர் இல்லை; மாற்று உடை இல்லை. கோழி கூவும்முன்னே எழுந்துபோய், மையிருட்டில் சூடிசைக்குத் திரும்பும் 'ஆதி திராவிடர்கள் அழுக்காயிருக்கிறார்கள். அவர்களை அருகில் விடாதே?' இது சாதி நடைமுறை. எவ்வளவு அநீதி? சந்து பொந்துகளில், புதர்களுக்கிடையில் உள்ள ஒற்றடிப் பாதைகளில் நடமாடும் ஒதுக்கப்பட்டோர் எவராகிலும் காலில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க முடியுமா? முடியாது. அவருடைய தோலை உரித்துவிடுவார்கள். சோற்றுக்கில்லா விட்டாலும் சூத்திரப்பட்டந்தாங்கியிருந்தாலும் சமுதாய ஏணியில் ஆதி திராவிடர்களுக்கு மேல்படிகளில் நிற்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் வீரப் பார்ப்பனரல்லாதார்களே, அக்கொடுமைக் குப் பொறுப்பாயிருப்பார்கள். சிறு நகரங்களில்கூட எந்த நெருக் கடியிலும் ஆதி திராவிடர்கள் சைக்கிளில் செல்ல முடியாது. அதைக்