பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புரட்சியாளர் பெரியார் எங்கள் அய்யங்கார் எங்கிருந்து குடிநீர் கொண்டு வருவார்? உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே, வட்டாட்சி அலுவலகத் திடலில் இருந்த, நகராட்சிக் குழாயிலிருந்து. அக்குழாயை சின்ன சாதிக் காரர்கள் தொட்டிருக்கலாமல்லவா? அந்தத் தீட்டை எப்படிக் கழிப் பார் தெரியுமா? பக்கத்திலிருந்த கிணற்றில் இருந்து ஒரு குடம் தண்ணீர் மொள்ளுவார். அதை குழாயின்மேல் கொட்டுவார். நீர் ஊற்றி தீட்டுக் கழித்த பிறகு, குழாயில் தண்ணீர் பிடிப்பார். நிறைந்த குடத்து நீரை பள்ளிக்கூடத்திற்குள்ளே கொண்டுபோய் பானையில் - மன்னிக்கவேண்டும்-பானைகளில் ஊற்றிவிட்டு வரு வார். இதற்குள் யாராகிலும் குழாயைத் தொட்டுத் தீட்டாக்காத படி,பள்ளிக்கூட காவற்காரரை காவல் வைத்துவிட்டுப் போவார். இடைவேளையில் மாணவர் நீர் அருந்தச் சென்றால் இரு வரிசைகளில் நிற்கவேண்டும். ஒரு வரிசையில் பார்ப்பனப் பிள்ளை கள், அடுத்த வரிசையில் மற்ற பிள்ளைகள் பிள்ளைகள் நிற்கவேண்டும். பார்ப்பன வரிசைக்குத் தனிக் குவளை. மற்றவர் வரிசைக்கு வேறோர் குவளை. பார்ப்பனர் பானை தனி; இதராள் பானை வேறு. இக்கால தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு இது கதையாகத் தோன்றலாம். ஆனால், அன்று எங்கும் நடந்த இழிவுபடுத்தும் ஏற்பாடு இது. பிள்ளைகள் வர வர, எந்த சாதிப் பிள்ளையானாலும் ஒரு வரிசையில் நின்று, தண்ணீர் வாங்கிக் குடிக்கலாமே! முதல் பானை தண்ணீர் தீர்ந்துபோனதும் அடுத்த பானைத் தண்ணீரை ஊற்ற லாமே! பார்ப்பன பானையிலிருந்து பத்து பேர்களுக்கு; அப்புறம் அதை நிறுத்திவிட்டு இதராள் பானையிலிருந்து சிலருக்கு தண்ணீர் ஊற்றுவானேன்? இப்படிக் கேட்கக்கூடும் நீங்கள். பார்ப்பனரல்லாதவர்களுக்கு ஊற்றிய நீரின் மிச்சத்தையோ பரிமாறிய உணவின் மிச்சத்தையோ திரும்பப் பாத்திரத்தில் சேர்த் தால் அதிலிருக்கும் நீரும் உணவும் தீட்டுப்பட்டுவிடும். இப்படி கால காலமாக சாத்திரம் கற்றவர்கள் சொல்லுகிறார்கள். அதை ஏற்றுக்கொண்டு அடங்கிக் கிடக்க, கோடிக்கணக்கான கோழைகள் இருந்தார்கள். எனவே, பள்ளிக்கூட அய்யங்கார் தனித் தனி பானைகளிலிருந்து நீர் ஊற்றுவார். குவளைக்கு வெகு உயரத்தி லிருந்தும் ஊற்றுவார். காலணா, மாலை வேளை வீடு திரும்பும்போது, பார்ப்பன சிற்றுண்டிச் சாலைக்குள் நுழைந்தால், அரையணாவுக்குத் தின் பண்டம் வாங்கிச் சாப்பிடுவதிலும் ஆசாரம் புகுந்துவிடும். பார்ப் பனர்கள் உண்ணுமிடம் தனி, 'சூத்திராள்' உண்ணுமிடம் என்று தனியாக இருந்த காலமும் எனக்குத் தெரியும். அப்புறம்