பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை 15 'சூத்திராள்' என்பதற்குப் பதில் 'இதராள்' என்று பிரிவினையை அறிவித்து வந்தார்கள். நான் படித்த பள்ளிக்கூடம் தனியாருடையது. நான் போன சிற்றுண்டிச்சாலைகள், தனியார் நடத்தியது. தனியார் துறை எல்லாஞ் செய்ய உரிமை பெற்றதல்லவா? அவற்றைத் தள்ளிவிட்டு, மாவட்ட ஆட்சிக்குழுக்களால் நடத்தப்பட்ட, உயர்நிலைப் பள்ளி களுக்குச் சென்றாலும் இதே நிலைதான். பூனைக்கு யார் மணி கட்டுவது? சாதிக் கொடுமையின் கொம்பை ஒடிக்க யார் வருவார்? சாமி பேரால் செய்த இந்த இழிவுகளை உடைக்க முன் வருவார் இல்லை? பின்னர் பெரிய சென்னைப் பட்டினத்துக்கு வந்து, விக்டோரியா மாணவர் விடுதியில் நுழைந்தால், அங்கேயும் சாதிச் சனியன் வெகு காலம் ஆட்சி புரிந்தது. மரக்கறி உண்பவர்களைக்கூட இரு பிரிவு களாகப் பிரித்து வைத்திருந்தார்கள். பார்ப்பனருக்குத் தனிச் சமையல், உணவுக்கூடம். பார்ப்பனரல்லாதவர்களுக்கு வேறு சமையல்; வேறு உணவுக்கூடம். முன்னர் நம் நாட்டின் முதுகெலும்புகளான உழவரும் உழைப் போரும்- பெரும்பாலானோர் - எங்கே நுழைந்தாலும் எப்பக்கம் திரும்பினாலும் நீ தாழ்த்தப்பட்டவன், நீ சின்ன சாதி,நீ சூத்திரன் என்று இடித்துக்காட்டும் இழிநிலையே. அத்தனை யையும் பொறுத்துக்கொண்டு, கோழைகளாக, அடிமைகளாக. அடிவருடிகளாக, சோற்றுத் துருத்திகளாக வாழ்வதைவிட வேறு வழியில்லை, தன்மானப் பகலவன் ஈ. வே. ராமசாமி எழுந்து ஒளி வீசிக் காய்ச்சும் வரையில். பொருளாதார நிலை இத்தகைய சமூக அமைப்பின் அடிப்படையில் கிளைத்த அக் காலப் பொருளியல் நிலையை ஆராய்ந்தால், ஈரோடு போன்ற வணிக நகரத்திலும் வீடுகளைவிட குடிசைகளே அதிகம். சிற்றூர் களில் வீடுகள் வெகு சில; குனிந்து நுழையவேண்டிய குடிசைகளோ ஏராளம் ஏராளம். அக்குடிசைகளின் நிலை என்ன? கூறை ஒன்றிருக் கும்; அதைக் கரையான் தின்றிருக்கும். இப்பவோ, சற்று நேரத் திலோ விழக் காத்திருக்கும். குடிசைவாழ் மக்களோ வள்ளல் பரம்பரை, ஏழு மாட கோயில் கட்டிய பரம்பரை. அவர்களுக்கு இடுப்பில் கோவணம், தலையில் முண்டாசு. போதாதா இவை? வீட்டரசிக்கோ, கந்தல் புடவை ஒன்றே ஒன்று. மாற்றுப் புடவை மகராசிகள் நினைக்கவேண்டிய ஒன்று. மார்பை மறைக்க