பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புரட்சியாளர் பெரியார் இரவிக்கை இல்லை என்பது மட்டுமல்ல; கூடாது என்பதே கட்டளை. உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது. எனவே, அவர்களுக்கு கூழே பாயசம். உழவுக்கு அடுத்தது நெசவு அல்லவா? ஊரார் மானத்தைக் காக்கும் நெசவாளிகளின் நிலை என்ன? ஆறு திங்கள் பாவடி; அடுத்த ஆறு திங்கள் காவடி. ஏன் இப்படி? துணிந்து கேட்க முடியாது. கேட்டுவிட்டால், பூசாரியின் சாபம், புராணிகரின் வசை, ஊராரின் பொல்லாப்பு. , 'அது அது, அவன் அவன், வந்த வழி என்று எப்போதோ, எவனோ, எதற்கோ சொன்னானே அதுவே முடிந்த முடிவு; அதை மாற்ற நம்மைப் படைத்த பிரம்மாவாலும் முடியாது' என்று சொல்லும்போது தலையாட்டிக்கிடந்தால், சிலவேளை கஞ்சி ஊற்றுவார்கள். குடிமக்களுடைய நீண்ட, தொடர்ச்சியான அலட்சியப் போக்கு அரசியல் அடிமைத்தனத்திற்குத் அடிமைத்தனத்திற்குத் துணைசெய்தது. புராண காலத்தில், அய்ம்பத்தாறு நாடுகளாக இருந்த இந்தியா, ஆங்கிலேயரும், பிரஞ்சியரும், டச்சுக்காரர்களும், போர்த்துக் கீசியர்களும் இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தபோது, எப்படி இருந்தநு? தோழமையில்லாத, முடிந்தால் ஒருவர் காலை ஒருவர் வாரிவிடும் அழுக்காறும் வெறுப்பும் பின்னிப் பிணைந்த, நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு நாடுகளாகச் சிதறிக் கிடந்தன. யவனத்திற்கும் ரோமாபுரிக்கும் முத்தும் பவளமும் சந்தனமும் தேக்கும் அரிசியும் ஏலமும் அனுப்பிப் புகழ்பெற்றிருந்த நிலை, உட்பூசலாலும் உள்நாட்டுப் போர்களாலும் குலைந்தது. பறங்கியர் கொண்டுவந்த சோப்பையும் சீப்பையும் கண்டு சொக்கிப் போயினர். அப்பாவிக் குழந்தை, அய்ந்து காசு பஞ்சு மிட்டாய்க்கு கையிலுள்ள அய்ம்பது காசையும் கொடுத்துவிட்டு, ஓடுவதுபோல், நம் 'மன்னர்கள்' அன்னியர் ஊடுருவலுக்கு வழி திறந்துவிட் டார்கள். பிழைக்க வந்தவர்களிடம் உதவிகோரி, தூது அனுப்பி னார்கள், நம் மன்னர்கள். மெல்ல மெல்ல, அன்னிய ஆட்சி வலை இறுகிற்று. தன்னாட்சி தொலைந்தது. ஆங்கில ஆட்சி நிலைத் தது. அவர்கள் தயவில் சில நூறு பொம்மை மன்னர்கள், இந்தி யர்கள், சிறு சிறு திட்டுகளை உறிஞ்சும் உரிமை பெற்றார்கள். ஜமீந்தாரி முறை சுதேச மன்னர்கள் மட்டுமா உறிஞ்சும் உரிமை பெற்றவர்கள்? இல்லை. ஜமீந்தார்கள் என்னும்மற்றோர் வகை புல்லுருவிகளும்