18 புரட்சியாளர் பெரியார் பாக மாறும். இளைப்பு, நோய்களின் தாயகம். ஆகவே, 'எண்ணிலா நோயுடையார்-இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமை யிலார்.' இப்படி அல்லல்பட்டு, நம் பொதுமக்கள், 'கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார். நிறவெறி வறுமையால் வாடும் இந்தியர்களை ஆளும் இனமாகிய வெள்ளையர்கள் நிற அடிப்படையில் இழிவுபடுத்தினார்கள். இந்தியர், ஆங்கிலேயர் ஆட்சியில் சிக்கி, அவர்களுடைய அட்ட காசங்களையும் ஆணவ நடவடிக்கைகளையும் சுரண்டலையும் பொறுத்துக்கொண்டு, ஊமையர்களாக, குருடர்களாக, புழுக் களாக இருந்து வந்தார்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் நோயான தலைவிதிக் கொள்கை, நம்மிட மிருந்து ஆன்மையை, தீமைகளைக் கண்டு கொதிக்கும் இயற்கை யான தன்மையை, அழித்துவிட்டதுபோலும். ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மாநகரில் கிரிக்கெட் விளையாட்டுப் பந்தயம் நடந்தது. சென்னை மாநிலக் கல்லூரிக் குழுவும், பெங்களூர் மையக் கல்லூரிக் குழுவும் எதிர் எதிராக விளையாடினார்கள். அவ்விளையாட்டைக் காண, சில 'இந்திய பெரிய மனிதர்'களுக்கு அழைப்பு வந்தது. எவர் பெயரில் அழைப்பு? சென்னை விளையாட்டு மன்றத் தலைவர். உறுப்பினர்கள் பெயரில் அழைப்பு அச்சடிக்கப்பட்டிருந்தது. பெரிய இடத்து-ஆளும் இனத்து அழைப்பைத் தள்ளமுடியுமா? காலை விளையாட்டிற்குச் சில இந்தியர் சென்றிருந்தார்கள்; சிம்காணா மண்டபத்தில் உட்கார்ந்து விளையாட்டைப் பார்த் தார்கள். இந்த சமத்துவம் சில மணிகளில் பறந்துவிட்டது. விளையாட்டு மன்றச் செயலர், திரு. செயலர்,திரு. சாட்டர்டன் வந்தார். ஆணையிட்டார். என்ன ஆணை? இந்தியப் பார்வையாளர்கள் மண்டபத்தில் இருக்கக்கூடாது. தொலைவில் போடப்பட்டுள்ள கூடாரங்களுக்குப்போய் அங் கிருந்து விளையாட்டைப் பார்க்கட்டும் அல்லது மர நிழலி லிருந்து காணட்டும் என்பது வெள்ளையரின் ஆணை? இதற்குக் காரணஞ் சொன்னாரா? சொன்னார், என்ன காரணம்? பிற்பகல், வெள்ளைக்கார் ஆண்களும் பெண்களும் இவ் விளையாட்டைப் பார்க்க வரலாம். அவர்களோடு சுதேசி ஆண்கள் இருப்பது ஆகாது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை