பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றைய சூழ்நிலை 19 இன ஒதுக்கல் எப்படி? நம் நாட்டில் நாம் ஒதுங்கிப் போக வேண்டும். இதைப்பற்றி அப்போதைய 'இந்து' நாளிதழ் மனக் குறைப்பட்டது. மனக்குறை நியாயம். எல்லா வகை ஒதுக்கலும் கண்டனத்துக்கு உரியதே. அதே திராசை இந்தியர்களுக்குள்ளும் இன பயன்படுத்த வேண்டாமா? நாம், நெடுநாளைய பழக்கவழக்கம், பெரியவர்கள் வழி, சமயக் கொள்கை, சாத்திரத்தின் கட்டளை, என்று சொல்லி ஒருவரோடு ஒருவர் புழங்க முடியாமல், ஒருவரை ஒருவர் நெருங்க முடியாமல், கோடிக்கோடி மக்களை ‘தீண்டத்தகாதவர்' என்று பிரித்து ஒதுக்கி வைத்திருந்தோமே அது எந்த நீதியின்பாற் பட்டது? இன்றும் சாதி முனை மழுங்கிற்றே ஒழிய அது அடியோடு ஒழியவில்லையே! இதைப்பற்றி குமுறவேண்டாமா? இதைத் தகர்க்கவேண்டாமா? 1893ஆம் ஆண்டு; அக்டோபர் திங்கள் நான்காம் நாள். குண்டக்கல், ஓர் எளியவரின் தியாகத்தைப் பதிவு செய்தது. நீலகிரியில் உள்ள வெல்லிங்டனில் இருந்து சில ஆங்கிலேயப் படை வீரர்கள் அணி செகந்திராபாத்திற்குச் சென்றுகொண்டிருந் தது. வழியில் குண்டக்கல்லில் தங்கி இளைப்பாறினார்கள். படை வீரர்களில் சிலர், ஊரைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந் தார்கள். அப்போது, இரு இளம் பெண்கள், தங்கள் கிராமத் திற்குத் திரும்பிப் போவதைக் கண்டார்கள். படை வீரர்கள் சிலர் நாய்களானார்கள். அப் பெண்களைத் துரத்திப் பிடிக்க ஓடினார்கள். வெள்ளை சிப்பாய்கள் துரத்த, அவ்விரு இளம் பெண்களும் ஓடோடிப்போய் வழியிலிருந்த இரயில்வே வாசல் காப்போரிடம் தஞ்சமடைந்தார்கள். அவர் நொடிப்பொழுதில் அப் பெண்களை தன் அறையில் புகவிட்டு, கதவைப் பூட்டி விட்டார். துரத்தி வந்த வெள்ளை வெறியர்கள், அம்பண்ணா என்ற அக்காவலாளியைப் பார்த்து, அறையைத் திறந்துவிடும்படி மிரட்டினார்கள். காவலாளி, மசியவில்லை. வெள்ளையரில் ஒருவரான கார்ப்பரல் ஆஷ்போர்டு, தனது துப்பாக்கியை எடுத்து அம்பண்ணாவைச் சுட்டுவிட்டார். குண்டடிப்பட்ட அம்பண்ணா இறந்துவிட்டார். ஆஷ்போர்டு கைது செய்யப்பட்டார். குற்றஞ்சாட்டப் பட்டார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. முடிவு? 9-2-1894 அன்று ஆஷ்போர்டை விடுதலை செய்துவிட்டது, உயர் நீதி மன்றம். ஆளும் இனத்தைச் சேர்ந்த ஆஷ்போர்டு தற்காப்புக் காக, வெறும் கைத்தடி மட்டும் வைத்திருந்த காவலாளியைச் சுட்டார் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, அக் கொலைகாரக்