பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காமுகன் விடுதலை செய்யப்பட்டான். மயக்கம் என்றால் தவறா? புரட்சியாளர் பெரியார் இது நீதி தேவனின் சுதேசிகளுக்கு எங்கே பாதுகாப்பு. ஆளும் ஆங்கிலேயருக்குத் தனி நீதியா?' என்று அப்போது 'இந்து' நாளிதழ் கண்டித்தது. அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பையும் சூழ்ச்சிகளையும் முறி யடித்து, அம்பண்ணா குண்டடிபட்ட இடத்திற்கு அருகில் ஒரு துண்டு நிலத்தை வாங்கி, அங்கே அவருக்கு நடுகல் நாட்டி சிறப் பித்தார்கள். இதை முன்னின்று செய்தவர், குத்தி கேசவ பிள்ளை ஆவார். மற்றும் சில சான்றுகள் 1911ஆம் ஆண்டு ஜி.எச்.பி. ஜேக்சன், ஐ.சி.எஸ். என்பவர் செங்கற்பட்டின் இணை குற்றவியல் நடுவராக இருந்தார். அவர் ஒருநாள் ஈருருளியில் போய்க்கொண்டிருந்தபொழுது ஏழு வயது மாணவன் ஒருவன் அவரைப் பார்த்து 'காலை வணக்கம்' என்று கத்தினானாம். உரத்த குரலில் சொன்னதால் ‘துரை’க்கு மரியாதை குறைந்துவிட்டது. அப்பாலகனை, வழக்கு மன்றத்திற்கு இழுத்து வரச் செய்து, அய்ந்து ரூபாய் அபராதம் அல்லது ஒரு வாரக் கடுந் தண்டனை என்று தண்டித்தார். அதிகார போதை பொல்லாதது ஆயிற்றே. சென்னை மாகாணத்தில் அரசுப் பண்ணை ஒன்றில் ஓர் இந்தியக் கிறுத்தவர் வேலை பார்த்து வந்தார். அவர், வெள்ளைக்காரர்களைப்போல 'ஹாட்' அணிவது வழக்கம். வேளாண்மைத் துறையின் இயக்குநர் திரு எம். ஈ. கெளச்மேன் என்பவர் இதைப் பார்த்துவிட்டார். இந்தியன் இப்படி வருவது பிடிக்கவில்லை. 'ஹாட்'டை விட்டுவிட்டு, தலைப்பாகை அணிந்து வரும்படி சொன்னார். இந்திய ஊழியர் கீழ்ப்படியவில்லை. விளைவு? அந்த இந்திய கிறுத்தவர் பதவி இறக்கம் செய்யப் பட்டார். 1919ஆம் ஆண்டில் ஜனவரி திங்களில், வெள்ளையர் இறு மாப்பைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. பீகார் அரசின் செயலாளர்களில் ஒருவர், திரு. பிராங்கிளேடன் ஐ.சி.எஸ். என்பவர். அவர் ஒரு முதல் வகுப்பு ரெயில் பெட்டியில் ஏறினார். அப்போது ஓர் இருக்கையில் இந்தியர் ஒருவர் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார். தூங்கும் இந்தியரைக் கண்டதும் ஆளும் வர்க்கத்தாருக்கு கோபம் பொங்கிற்று. நேரே தூங்குபவரிடம் சென்றார். அவருடைய இடது தொடையின்