அன்றைய சூழ்நிலை 21 மேல் உட்கார்ந்தார். தூங்கியவர் விழித்துக்கொண்டார். அவர் யார்? கல்கத்தா உயர்நீதிமன்ற நடுவராக இருந்து, ஓய்வுபெற்ற திரு.சையத் ஆசன் இமாம் ஆகும். இன்னார் என்று தெரிந்ததும், அவரிடம் மன்னிப்புக் கோரினார். அதிகாரம் யாரையும் நிலை தடுமாறச் செய்யும்போலும். இந் நிலையில் சிலர் படித்து பட்டம் பெற்றார்கள். படித்த இந்தியர்களுக்கும் நிர்வாகத்தில்-ஆட்சியில் அல்ல-சில பதவிகள் வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது. இக் கருத்தினை தனித் தனியே வெளியிடுவதைவிட அமைப்பின் வழியாக வெளியிடுவது பலன் அளிக்கக்கூடும் என்று என்று கருதினார்கள். 'யூம்' என்னும் ஆங்கிலேயர் தலைமையில் சென்ற நூற்றாண்டில் அனைத்திந்திய காங்கிரசு முளைத்தது; வளர்ந்தது; அப்போதைக்கப்போது அனைத்திந்திய காங்கிரசு மாநாடாகக் கூடியது. முதலில், நிர்வாகப் பதவிகளில் பங்கு கேட்டது. காலவோட்டத்தில் ஆட்சியிலும் பங்கு கேட்கும் நிலைக்கு உருவாகியது. கோரிக்கை வளர்ந்தது. தன்னாட்சி உரிமை கோருவதாக வளர்ந்தது. 'விடுதலை எங்கள் பிறப்புரிமை'; இது, துடிப்புடையோர் முழக்கம். பிரிட்டிஷ் பேரரசில் சுயாட்சி உடைய இந்தியா'- மிதவாதி களின் இம் முழக்கமும் கேட்டது. இரு பிரிவினருக்கும் அரசியல் செல்வாக்கிற்குப் போட்டி கடுமையாக இருந்தது. பதவிகளில் பாகுபாடு நிர்வாகப் பதவிகளில் இந்தியர்கள் பெற்ற இடங்கள் பெருகிக் கொண்டே இருந்தன. ஆனால் இந்திய சமுதாயத்தில் உள்ள எல்லாப் பிரிவினருக்கும் எட்டவில்லை. பெரிய பதவிகளெல்லாம் மிகச் சிறுபான்மையான பார்ப்பனர்களோடு முடங்கிவிட்டன. 1912ஆம் ஆண்டில் பல்வேறு பதிவுப் பெற்ற அரசாங்க பதவி களில் பார்ப்பனர்களுக்கும் மற்றவர்களுக்கும் எத்தனை இடங்கள் கிடைத்திருந்தன என்பதை பின்வரும் பட்டியல் பளிச்சென்று காட்டுகிறது.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை