26 புரட்சியாளர் பெரியார் இப்படி, ஏன், எப்படி, எதனால் என்று கேட்பதன் வாயிலாக அறிவிலே வளரும் குழந்தைக்கு வீட்டிலுள்ள முதியோர், புதிய ஆணையொன்றை இடுகிறார்கள். இதோ வீடு பெருக்கும் வேலைக் காரியைத் தொடாதே; அவள் கழுவிவைத்த பாத்திரத்தை எடுக் காதே; நான் தண்ணீர் ஊற்றிப் புனிதப்படுத்திய பிறகு தொடு; அந்த பெண் பிள்ளை கையில் தண்ணீர் குடிக்காதே. சோறு உண் ணாதே. இப்படி, செய்யக்கூடாத, தொடக்கூடாதவற்றின் பட்டியல் வளர்கிறது. முதல் இரண்டொன்றை அச்சத்தாற் கேட்டுக்கொண்ட குழந்தையும் பின்னர் கேள்வி கேட்கத் தலைப் படும். கொசு, என்மேல் உட்கார்ந்ததும் கடிக்கிறது; உடனே எனக்கு வலிக்கிறது. வேலைக்கார அம்மா என்னைத் தொட் டால் அப்படி வலிக்கவில்லை; அப்படியிருக்க அந்த அம்மாவை ஏன் தொடக்கூடாது? அன்றைக்கு தம்பி, பூரானை மிதித்துவிட்டான். அது வெடுக் கென்று கடித்துவிட்டது. வலியால் நெடுநேரம் அலறினான். 6. அப்படி, அந்த அம்மாள் கைபட்டதால் எந்தக் குழந்தைக்கு விஷமேறிற்று; வலியெடுத்தது. அந்த அம்மா, தேளா, பூரானா, தொடாமல் போக? வகை 'வீடு பெருக்கும் அம்மா பேரன்தானே, கிணறு மூழ்கிக் கொடுத் தார். அந்த தண்ணியைத்தானே நாம் குடிக்கிறோம். குடத்தை நாமே இழுத்துக் குடித்தால் தீட்டு இல்லை; அந்த அம்மாள் இழுத்துத் தொட்டுவிட்டால் எப்படித் தீட்டாகும்?' இப்படியாக வகையான கேள்விகளைப்போடுவது குழந்தைகளின் இயல்பு. அவை, இடக்கான கேள்விகளைக் கேட்டு திண்டாட வைப்பது, நம் பட்டறிவின்பாற்பட்டதே. இவை மதிநுட்பத்தின் அடையாளங்கள்; போக்கிரித்தனத்தின் வெளிப்பாடுகள் அல்ல. ஆயினும் பொறுமைக் குறைவாலும் திறமைக் குறைவாலும் முதிய வர்கள், குறுக்கு வழியே பாய்கிறார்கள். அடக்கி வளர்க்கத் தலைப்படுகிறார்கள். வாயடைப்பதே வளர்ப்பு முறையாக நினைத்து விடுகிறார்கள். 'சும்மா! சொல்வதைக் கேட்டுக்கொண்டிரு. தொண தொண வென்று கேட்டுத் தொல்லைப்படுத்தாதே. இன்னொரு தரம் கேட்டே, பளார் பளார் என்று ...' சொற்றொடர் முடியாது. ஆனால், குழந்தை புரிந்துகொள்ளும். மெல்ல, மெல்ல, எதைச் சொன்னாலும் பதிந்துகொள்ளும் பதிவு நாடாவாக மாறிவிடும். ஆல்போல் தழைக்கவேண்டிய அறிவு, அருகுபோல் குன்றிக் கிடக்கும். ஒரோர் வேளை, மிரட்டலுக்கும் அஞ்சாத, அடி உதையையும் பொருட்படுத்தாத, தற்சிந்தனை வற்றாத. சிலர் வளர்வதுண்டு.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை