பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UNIVERSITY OF MADRAS Prof. G. R. DAMODARAN, B.Sc. Engg., C. Engg., F. I. E. E. (Lond.), F.1. Nuc. E. (Lond.), F. I. E. (Ind.), Vice-Chancellor. UNIVERSITY BUILDINGS, CHEPAUK, MADRAS-600 005. அணிந்துரை தமிழக மெங்கும் பெரியார் பெரியார் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகக்கொண்டாடும் நேரத்தில், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் புரட்சியாளர் பெரியார்' என்ற பெயரில், தமிழ் மக்களுக்கு ஓர் அரிய நூலை எளிய நடையில் உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு நற்பணி. இந்நூல் பெரியார் அவர்கள் பிறந்தபோதும் அதற்கு முன்பும் நிலவிய சமுதாய, அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளை விளக்கி, சமுதாயத்தில் அன்றிருந்த குறைபாடுகளை எடுத்துக் காட்டி, அவைகளை அகற்ற பெரியார் மேற்கொண்ட பணிகளை யும், போராட்டங்களையும் நன்கு விளக்குகின்றது. பெரியார் அவர்களோடு பல ஆண்டுகாலம் நெருங்கிய தொடர்புகொண்டு, அவருடைய அன்பையும் பெற்ற திரு.நெ.து.சு. அவர்கள் பெரி யாரின் தனித்தன்மைகளைத் தனியாக ஓர் இயலில் நம் மனதைக் கவரும் வண்ணம் எடுத்துச் சொல்கிறார். பெரியார் அவர்களின் பணிகள் பொதுவாக இந்திய நாட்டிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி யுள்ளன என்பதனை நூலின் இறுதியில் தெளிவாக எடுத்துரைக் கிறார் திரு.நெ.து.சு. அவர்கள். இந் நூலாசிரியர் பெரியாரின் அயல்நாட்டு அனுபவங்களைப் பற்றியும், வியப்பூட்டும் கிளர்ச்சிகளைப்பற்றியும் தெளிவாக எடுத்து விளக்கியிருப்பது ஒரு சிறப்பு. பெரியார் அவர்கள் இந் நாட்டு அரசியல், சமுதாய வளர்ச்சியில் மாற்றங்களையும், விறு விறுப்பையும் ஊட்டிய ஒரு வியக்கத்தகு ஆற்றல் எனலாம்.