பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புரட்சியாளர் பெரியார் கூடாது. அத்தகைய சமத்துவ நிலையே சரியான நிலை.' இப்படிக் கருதினார், துடுக்குப் பிள்ளை ராமசாமி, கருத்து செயல்பட்டது. தண்ணீர் அருந்தக்கூடாத வீடுகளுக்குச் சென்றார். அவரே, நீரை வாங்கிக் குடித்தார். அதோடு நின்றாரா? இப்புரட்சியை வெளிப்படுத்தினார். பெற்றோரால் தடுக்கமுடியவில்லை. சாதி யொழிப்பு நடவடிக்கை ராமசாமியின் பத்துப் பன்னிரெண்டு வயதிலேயே முளைத்துவிட்டது. அதைக் கிள்ளி எறிய எவராலும் முடியவில்லை; எதனாலும் முடியவில்லை. பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க மட்டுமே முடிந்தது. பொது வாழ்வு பாடங்களைக கவனிக்காத ஈ.வே. ராமசாமியை 12 வயதிலேயே வாணிகத்தைக் கவனிக்க ஈடுபடுத்தினர், அவருடைய பெற்றோர். மக்களைக் கவனித்து, அவர்களிடமிருந்து நேர டியாக உலகியல் பாடங்களை கற்றுத் தேர்ந்திருந்த ஈ. வே. ராமசாமி, தொழில் திறன் மிகுந்தவராக வளர்ந்தார். வாணிகத்தைச் செழிக்கச் செய் தார். பலரோடும் கலகலப்பாக, அகந்தையின்றி பழகும் இயல்பினை உடைய ராமசாமியின் புகழ் பரவிற்று. ஈரோட்டு நகரெங்கும் பரவிற்று. அப்பாலும் மணம் வீசியது. அதன் விளைவாக, ஈரோட்டு நகராட்சியின் உறுப்பினர் ஆனார். பிறகு தலைவரானார். தலைவராக சிறப்பு முத்திரையைப் பதித்தார். காவிரி ஆற்றிலிருந்து ஈரோடு நகரத்திற்கு குடிநீர் கொண்டு வந்து வழங்கும் திட்டத்தை நிறைவேற்றினார். ஈரோட்டு வட்டத்திலும் கோவை மாவட்டத்திலும் கோயில் காப்புக் குழுக்கள், வணிகர் மன்றம், பாதுகாப்புக் குழுக்கள் போன்ற பல்வேறு குழுக்களில் உறுப்பினராக, செயலராக, தலைவ ராக, பொதுத்தொண்டு ஆற்றினார். சீமான் அப்போது ராமசாமிக்கு, நாற்பதை நெருங்கும் வலிமைப் பருவம்; சுகத் தைத் தேடி அலையும் வசந்தம். ஏறத்தாழ அதே காலகட்டத்தில், தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கக்கொள்கையை எதிர்த்து, இந்தியர்களின் சம உரிமையை நிலை நாட்டப் போராடி, சிறைத் தழும்போடும் புகழொளி யோடும் இந்தியா திரும்பிய மோகன்தாஸ் கரம்சந் காந்தியாரின் தலைமையை தேசிய காங்கிரசு ஏற்றுக்கொண்ட நிலை. காங்கிரசு அமைப்பு, காந்தியாரின் தலைமையின்கீழ் இவ்வாறு வந்து பிறகு, அது மக்கள் இயக்கமாகத் தழைத்தது. படித்த. பதவிகளின்மேல் கண்ணோட்டமுடைய கூட்டத்தின் கூடாரமாக இருந்த காங்கிரசு, உரிமை உணர்வுடைய இந்தியப் பொதுமக்கள்